- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதே நினைப்புடன் வெ.இ போகாதீங்க.. சூப்பர் 8 சுற்றில் அவர் கண்டிப்பா விளையாடனும்.. பியூஸ் சாவ்லா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக லீக் சுற்றில் அயர்லாந்தை தோற்கடித்த இந்திய அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு முன்பாக இந்தியா தன்னுடைய கடைசி லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது. அந்த முக்கியமான சுற்று முழுவதுமே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுகிறது. முன்னதாக லீக் சுற்று நடைபெற்ற அமெரிக்க மைதானங்கள் பெரும்பாலும் பேட்டிங்க்கு சவாலாகவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்தது.

- Advertisement -

சூப்பர் 8இல் மாற்றம்:
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் இரண்டுக்குமே சமமான சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் சராசரியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 150 ரன்கள் அடிக்கப்படுகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

அது போன்ற சூழ்நிலையில் சஹாலை காட்டிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் அதற்கான காரணத்தை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நியூயார்க் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. அங்கே 3 வெற்றிகளை பெற்ற இந்தியா தொடர்ந்து அதே அணியுடன் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் நியூயார்க் நகரில் ஸ்பின்னர்களுக்கு அதிக வேலை இல்லை”

- Advertisement -

“ஆனால் சூப்பர் 8 சுற்று தொட்டதும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஸ்பின்னர்கள் பெரிய வேலை செய்வார்கள். நான் உண்மையை சொல்ல வேண்டுமெனில் அது போன்ற சூழ்நிலையில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார். ஏனெனில் அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே உங்களிடம் அக்சர் படேல் மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங் ஆழத்தை அதிகரிப்பதற்காக உள்ளனர்”

இதையும் படிங்க: விராட் கோலி – ரோஹித் சர்மா ஓப்பனிங் ஜோடியை கலைக்காதீங்க.. காரணம் இது தான்.. பிரைன் லாரா அட்வைஸ்

“எனவே குல்தீப் வாய்ப்பு பெறுவார் என்று நான் கருதுகிறேன். அமெரிக்க மைதானம் மிகவும் சவாலாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அங்கேயும் அணிகள் நன்றாக விளையாடின. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 120 ரன்கள் கட்டுப்படுத்தியதை சொல்லலாம். நாம் வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த போது இந்தியா வெல்லும் என்று பலரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் நம்முடைய பவுலர்கள் குறிப்பாக பாண்டியா – பும்ரா ஆகியோர் அ

- Advertisement -