- Advertisement -
ஐ.பி.எல்

200 ஸ்ட்ரைக் ரேட்டை விட.. 200% எனர்ஜியுடன் விராட் கோலி செய்ற இது முக்கியம்.. பியூஸ் சாவ்லா ஆதரவு

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொள்கிறது. அதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றபி ன் விராட் கோலி முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விராட் கோலி என்றாலே ஆரம்பத்தில் நங்கூரமாக விளையாடி நேரம் செல்ல செல்ல வேகமாக ரன்களை குவிப்பவராக அறியப்படுகிறார். அந்த அணுகுமுறையைப் பின்பற்றி அவர் நிறைய ரன்கள் குவித்து வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனாலும் ஐபிஎல் போன்ற நவீன டி20 கிரிக்கெட்டில் 130 – 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பதை விட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 20 பந்துகளில் 40 ரன்களை எடுப்பதே வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

200% பங்களிப்பை பாருங்க:

அந்த வகையில் கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெரிய ரன்கள் குவித்தாலும் அதைக் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது பெரிய விமர்சனங்களை உண்டாக்கியது. இந்நிலையில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை விட 200% பங்களிப்பை கொடுக்கும் எண்ணத்துடன் கலந்திருக்கும் விராட் கோலிக்கு முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி எப்போதுமே தன்னுடைய அணிக்காக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தக் கூடியவர். அவருடைய நம்பர்களே அவரைப் பற்றி பேசும். ஆனால் நாம் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுகிறோம். உண்மையில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 130 – 140 என்றளவில் நன்றாகவே இருக்கிறது”

- Advertisement -

சாவ்லா ஆதரவு:

“ஏனெனில் அனைத்து அணிகளிலும் ஏதேனும் ஒரு வீரர் ஒரு பக்கத்தில் நங்கூரமாக விளையாட வேண்டும். அந்த வேலையை விராட் கோலி அதுவும் 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் செய்தால் அது மிகவும் நல்லது. நாம் விருப்பம் இல்லாமல் அதிகம் பேசுகிறோம். அதிகம் யோசிக்கிறோம். என்னைப் பொறுத்த வரை விராட் கோலி களத்திற்கு சென்றால் தனது 200% பங்களிப்பை கொடுப்பார்”

இதையும் படிங்க: மெகா ஏலத்தில் விலை போகாமல் சென்ற பின்னர் கேன் வில்லியம்சன் எடுத்துள்ள புதிய அவதாரம் – விவரம் இதோ

“தனது உடலை கோட்டின் மீது வைத்து செயல்படக்கூடிய விராட் கோலி எப்போதும் முழுமையாக எனர்ஜியைக் கொண்டவர். தனது அணிக்காக எப்போதும் ஏதேனும் ஸ்பெஷலாக செய்யத் தயாராக இருப்பவர். டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நீங்கள் உங்களுடைய பெயருக்காக அழுத்தத்தை ஏற்றுக் கொண்டு விளையாட விரும்புவீர்கள். விராட் கோலியும் அழுத்தம் இல்லை என்று சொல்ல மாட்டார். அவரது வயிற்றிலும் வண்ணத்துப் பூச்சிகளாக கொஞ்சம் அழுத்தம் இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -