இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதியான இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன்காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய அவதாரம் எடுத்துள்ள கேன் வில்லியம்சன் :
இந்த தொடருக்கு முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் சவுதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. அந்த மெகா ஏலத்தில் வீரர்களின் அணி மாற்றமும் நிகழ்ந்திருந்தது. பல வீரர்கள் பெரிய தொகைக்கு விலைபோன நிலையில் சில நட்சத்திர வீரர்கள் எந்த அணியலாம் வாங்கப்படாமல் சென்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன் எந்த அணியாலும் வாங்கப்படாமல் சென்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விலை போகாத கேன் வில்லியம்சன் இந்த 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றபோதும், கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்ற போதும் அந்த அணிகளில் இடம்பெற்றிருந்த அவர் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளில் இருந்துள்ள பெருமையை உடையவர்.
தற்போது புதிய அவதாரத்தை எடுத்துள்ள அவர் இந்த ஆண்டு வர்ணனை செய்ய இருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பல்வேறு முன்னாள் வீரர்கள் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் வேளையில் தற்போது கேன் வில்லியம்சனும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : தோனி ஓகே சொன்ன பிறகு தான் நான் அந்த முடிவுக்கே ஒத்துக்கிட்டேன் – டுவைன் பிராவோ வெளிப்படை
34 வயதான கேன் வில்லியம்சன் இனி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்புவது கடிதம் என்பதால் வரணையாளராகவே தொடர்ந்து செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றளவும் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அவருக்கு ஐ.பி.எல் தொடரில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது ஒருபுறம் வருத்தமான விடயம் தான்.



