
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அப்படி நியமனம் செய்யப்பட்டதும் விராட் கோலியுடன் அவர் எப்படி இணைந்து செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஏனெனில் ஒரே மாநிலத்தில் பிறந்து நாட்டுக்காக ஒன்றாக விளையாடினாலும் 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலி – கௌதம் கம்பீர் நேருக்கு நேர் சண்டையிட்டனர். அதே போல 2023 சீசனில் லக்னோ அணியின் பயிற்சியாளராக கொஞ்சமும் மாறாக கம்பீர் மீண்டும் விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தார்.
இந்நிலையில் 2023 உலகக்கோப்பையில் விராட் கோலி 50வது ஒருநாள் சதத்தை அடித்த பவுலர் யாரென்று தமக்கு நினைவில்லாத போது கம்பீர் சரியாக சொன்னதாக பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வீரரின் திறமையை அறிந்து நம்பிக்கை வைத்து விட்டால் கௌதம் கம்பீர் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளி வழங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்தையும் தாண்டி கௌதம் கம்பீர் தங்கமான மனிதர் என்று தெரிவிக்கும் சாவ்லா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நானும் கௌதம் பாயும் வர்ணனையாளராக ஒரு நிகழ்ச்சியை செய்தோம். அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி எந்த பவுலருக்கு எதிராக தன்னுடைய 50வது சதத்தை நிறைவு செய்தார் என்று கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை”
“ஆனால் கம்பீர் சரியாகச் சொன்னார். அந்த தருணத்தில் எங்களுக்குள் எப்போதும் சண்டை இருப்பதாக கருத வேண்டாம் என்ற வகையில் அவருடைய பதில் இருந்தது. உண்மையில் கௌதம் பாய் கிளாஸ் நிறைந்தவர். எப்போதும் உங்களுக்கு உத்வேகத்தையும் சுதந்திரத்தையும் வழங்குவார் என்பதே அவரைப் பற்றிய சிறந்த விஷயமாகும். உங்களிடம் திறமை இருப்பதை பார்த்து விட்டால் நீங்கள் சுமாராக விளையாடினாலும் அவர் உங்களுக்கு 14 போட்டிகளிலும் வாய்ப்பு கொடுப்பார்”
இதையும் படிங்க: சேவாக், மெக்கல்லம் ஆல் டைம் சாதனைகளை.. உடைத்து ரோஹித் – ஜெய்ஸ்வால் படைக்க உள்ள புதிய சாதனைகள்
“அவரது தலைமையில் நான் ஐபிஎல் தொடரில் 4 – 5 வருடங்கள் விளையாடினேன். இந்தியா ஏ அணிக்காக நாங்கள் ஒன்றாக விளையாடியுள்ளோம். களத்தில் ஆக்ரோசமாக செயல்படக்கூடிய அவர் களத்திற்கு வெளியே அதற்குச் சமமாக கனிவாக இருப்பார். கௌதம் பாய் நான் கடந்து வந்த நபர்களில் ஒரு சிறந்த மனிதர்” என்று கூறினார்.