- Advertisement -
ஐ.பி.எல்

தோனி மற்றும் ரெய்னாவை வாய்பிளக்க வைத்த சாவ்லாவின் சிக்ஸர் – வைரலாகும் புகைப்படம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் வரும் 29ம் தேதி பதிமூன்றாவது சீசன் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரில் தோனியின் விளையாட்டை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்திய அணியில் விளையாட அவர் இந்த தொடரின் மூலம் தனது திறனை நிரூபித்தால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல நாட்கள் தாமதத்திற்கு பிறகு கடந்த 1 ஆம் தேதி சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அவருடன் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான ராயுடு மற்றும் ரெய்னா ஆகியோர் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தோனி சென்னைக்கு வந்ததில் இருந்து தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரையில் ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

அதே போன்று தற்போது மற்றொரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அதன்படி சென்னையில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா மிரட்டலான சிங்சர் ஒன்றை அடித்து நல்ல ஒரு புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த சிக்ஸரை பார்த்த தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் மேலே வானை நோக்கி அந்த பந்து செல்லும் திசையினை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவு பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by