- Advertisement -
ஐ.பி.எல்

IPL 2023 : ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மிக மிக மோசமான சாதனையை படைத்த பியூஷ் சாவ்லா – விவரம் இதோ

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஏப்ரல் இரண்டாவது வாரத்தினை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 25 லீக் ஆட்டங்கள் இதுவரை நடைபெற்று முடிந்த வேளையில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை வீரர் பியூஷ் சாவ்லா ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே குவித்ததனர்.

அதன் காரணமாக மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா 43 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய அந்த போட்டியில் அவர் படைத்த இந்த மோசமான சாதனை யாதனில் : பியூஷ் சாவ்லா வீசிய ஓவரில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் க்ளாஸசன் சிக்ஸர்களை பறக்க விட்டார். அதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : என்னால் முடியாததை நீ சாதிச்சுட்ட, பெருமையுடன் அர்ஜுனை பாராட்டிய சச்சின் – ஆச்சர்ய புள்ளிவிவரம் இதோ

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை அதிக சிக்ஸர்களை வழங்கிய பவுலராக இருந்த யுஸ்வேந்திர சாஹலை பின்னுக்கு தள்ளி பியூஷ் சாவ்லா முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இதுவரை 170 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 185 சிக்ஸர்களை தனது பந்துவீச்சில் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by