5 கோடிக்கு மேல் தேவையில்லாமல் வாங்கப்பட்டதாக கருதிய பியூஷ் சாவ்லாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Chawla
- Advertisement -

ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்கிறது என்று அறிவித்ததில் இருந்து தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் ஒரே கலவரமாக இருக்கிறது. முதலில் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு மட்டும் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதில் ரவிந்திர ஜடேஜா ஹர்பஜன் சிங் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி, பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா, தீபக் சாகர், பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் தனி தனியாக விமானத்தில் வைக்கப்பட்டு துபாய் அனுப்பப்பட்டனர். இதில் சி.எஸ்.கே அணியுடன் முன்னணி வீரர் ஜடேஜா வந்து இணைந்து கொண்டார். ஆனால், ஹர்பஜன்சிங் வரவில்லை.

அதன் பின்னர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்குள் திடீரென கொரோனா வைரஸ் தொற்று புகுந்தது தீபக் சஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் உட்பட பதிமூன்று பேருக்கு இந்த வைரஸ் தொற்று உருவாகியது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னா திடீரென அணி நிர்வாகத்துடன் சிறிய சண்டை போட்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இந்தியாவிற்கு திரும்பி விட்டார்.

Harbhajan

அதற்காக அவர் தற்போது பல காரணங்களை கூறி வருகிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமிற்கு வந்து சேரவில்லை. மேலும் அவர் தற்போது இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக சி.எஸ்.கே அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனால் ஹர்பஜன் சிங் இந்த தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ரெய்னா விலகியதால் இப்போது இவரது விலகலும் சேர்ந்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chawla

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் இந்த விலகளால் பியூஷ் சாவ்லாவிற்கு வாய்ப்பு உறுதியாகியுள்ளது. ஜடேஜாவுடன் அவரும் இணைந்து பந்துவீசுவார் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5.75 கோடி கொடுக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டபோதே அவர்மீது விமர்சனம் இருந்தது. மேலும் அணியில் இடம்கிடைக்குமா ? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் விலகளால் இவர் நிச்சயம் மகிழ்ச்சியில் இருப்பார்.

Advertisement