- Advertisement -
இந்திய கிரிக்கெட்

20 வருட கரியரை முடிவுக்கு கொண்டுவந்த பியூஷ் சாவ்லா.. அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு – விவரம் இதோ

இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா கடந்த 2006-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளையும், 7 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற பியூஷ் சாவ்லா :

தனது 17-வது வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 23 வயதிற்கு பின்னர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்த அவர் கடந்த ஆண்டு வரை 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. தற்போது 36 வயதான இவர் இனியும் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்பதனால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கடந்து 2007-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போதும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற போதும் அந்த அணியில் பியூஷ் சாவ்லா இடம்பிடித்து விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் போட்டிகளிலும் 150-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தாலும் உள்ளூர் போட்டிகளில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடி வந்த அவர் தற்போது தனது 20 வருட கிரிக்கெட் கரியரை முடிவு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கிரிக்கெட்டில் இருந்து வெளியேற இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : விராட் கோலி சொல்றது வெ.இ வீரர்களுக்கு வேலையாகாது.. அதை விட்டதுக்காக வருத்தப்படல.. ரசல் ஆதங்கம்

நான் விரும்பிய இந்த போட்டியில் இருந்து வெளியேறுவது எனக்கு கடினமாக இருந்தாலும் என்னுடைய அடுத்த எதிர்காலத்தை நோக்கி பயணித்திருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் 2027 டி20 உலக கோப்பை மற்றும் 2011-50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு தொடர்களிலும் பங்கேற்று இருந்ததை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -