ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் 18 வருடங்கள் கழித்து பெங்களூரு அணியும் விராட் கோலியும் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தனர். அப்படி காத்திருந்து பெற்ற ஐபிஎல் வெற்றி விராட் கோலியின் கேரியரில் உச்சகட்ட வெற்றிகளில் ஒன்றாக வரலாற்றில் எழுதப்படும் என்றே சொல்லலாம்.
ஆனால் தம்மைப் பொறுத்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறும் வெற்றியே சிறந்தது என்று விராட் கோலி தெரிவித்தார். ஐபிஎல் போன்ற மற்ற வெற்றிகள் டெஸ்ட் போட்டியில் கிடைக்கும் வெற்றிகளுக்கு 5 படிகள் கீழே தான் இருக்கும் என்றும் விராட் கோலி கூறியிருந்தார். எனவே கிரிக்கெட்டில் புகழையும் பெயரையும் தரத்தையும் பெற வேண்டுமெனில் இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டார்.
எங்களுக்கி செட்டாகாது:
டி20 போட்டிகள் ராஜங்கம் நடத்தும் இந்தக் காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி அவர் பேசியது வளர்வதற்கு பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் விராட் கோலி கூறுவது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட நிறைய சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அதே சம்பளம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் ரசல் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியாவில் இருந்தால் அவர்கள் உங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது நன்றாக பார்த்துக் கொள்வார்கள்”
ரசல் ஆதங்கம்:
“அங்கே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் மேற்கு இந்தியர்கள் 100 அல்லது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் ஓய்வுக்குப் பின் காண்பிக்க ஒன்றும் இருக்காது. அதன் அடிப்படையில் நான் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறி விட்டேன். அவர்களும் என்னை அதிகமாக ஒயிட் பால் பிளேயராக பார்த்தனர்”
இதையும் படிங்க: 11 வருடங்கள் கழித்து புதிய பெயரில் கம்பேக் தரும் சாம்பியன்ஸ் லீக் டி20? இங்கிலாந்து நிர்வாகி தகவல்
“டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இவர் சிக்ஸர்களயும் பிரீமியர் லீக் அணிகளின் ஒப்பந்தங்களையும் விட்டு விட்டு வருவாரா? என்று அவர்கள் நினைத்தனர். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அதற்கு வாய்ப்பில்லை. நானும் டெஸ்ட் கிரிக்கெட்டை நம்புகிறேன். ஆனால் நாளின் இறுதியில் நான் ஒரு தொழில் முறை வீரர். அது என்னுடைய பயணத்தின் அங்கமாக இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனெனில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி என்னை திருப்பவில்லை” என்று கூறினார்.



