கொல்கத்தா பகல்இரவு டெஸ்ட் போட்டியில் இந்தநிற பந்துதான் பயன்படுத்த போகிறார்களாம் – சுவாரசிய தகவல் இதோ

Ball
- Advertisement -

வங்கதேச அணி அடுத்த மாதத் துவக்கத்தில் இந்தியா வந்து டி20 கொண்ட தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார்.

Ind

- Advertisement -

இந்நிலையில் தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியமிடமும் அந்த போட்டியை நடத்த அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அதனை உறுதி செய்தால் கண்டிப்பாக இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறும். அவ்வாறு நடத்தப்படும் பகலிரவு போட்டியில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சிகப்பு நிற பந்தை அங்கே பயன்படுத்த முடியாது.

ஏனெனில் பகலில் போட்டியில் சிகப்பு நிறம் என்பது விளையாடுவதற்கு சிரமமாக இருக்கும் மேலும் தெரியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பிங்க் நிற பந்தை பயன்படுத்த கங்குலி யோசனை கூறியுள்ளார். பிங்க் நிறம் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பளிச்சென்று தெரியும் என்பதாலும் மேலும் கடினமாக இருக்கும் அந்த பந்து தனது வடிவம் மற்றும் நிறத்தை எப்போதும் இழக்காது எனவே அந்த வகையான பந்தை பயன்படுத்த திட்டம் வைத்திருக்கிறார்களாம்.

ricket-ball

ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில குறைகள் இருந்ததால் தொடர்ந்து அதை பயன்படுத்தவில்லை. இந்நிலையில் அதன் தரத்தை மேம்படுத்தி தற்போது புதிய 24 பிங்க் மீரா பந்துகளில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி மற்றும் ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement