- Advertisement -
உலக கிரிக்கெட்

ரஷீத் கான் மிகப்பெரிய கவலையில் சிக்கியுள்ளார். அவர் மனம் உடைந்திருக்கிறது – பீட்டர்சன் பகிர்வு

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி இளம் வீரரான ரஷீத் கான் உலகம் முழுவதும் நடைபெறும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்களிலும் மேட்ச் வின்னராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகளைக் கொண்ட தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மிகப் பெரிய மன வருத்தத்தில் இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான பீட்டர்சன் போட்டியின் நேரலையில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான் படையினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.

- Advertisement -

இதனால் அந்நாட்டின் இருக்கும் மக்கள் தற்போது பெரிய சிக்கலில் சிக்கி உள்ளனர். கிரிக்கெட் விளையாடுவதற்காக உலகம் முழுவதும் பயணித்து கொண்டிருக்கும் ரசித் கானுக்கு தற்போது தனது குடும்பத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார். இதுகுறித்து நேரலையில் பேசிய பீட்டர்சன் கூறுகையில் :

ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய சூழல் குறித்து பவுண்டரி லைனில் நான் அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தனது நாட்டின் நிலைமையை சொல்லி வருத்தப்பட்ட அவர் அவரது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத நிலையில் மிகப்பெரிய கவலையில் மூழ்கி உள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் கிரிக்கெட் விளையாடுவது கடினமான ஒன்று.

ஏனெனில் தனது குடும்பம் சிக்கலில் இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது மிகவும் சவாலான காரியம். அவரது கதையை கேட்கும்போது மனதை உருக்கும் ஒரு கதையாக உள்ளது என பீட்டர்சன் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்களையும் ஆக்கிரமித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by