- Advertisement -
ஐ.பி.எல்

அவரு பந்துல மட்டும் அவுட்டாக கூடாதுனு நெனச்சே விளையாடுனேன் – பிலிப் சால்ட் மகிழ்ச்சி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிஃபயர் போட்டியானது நேற்று முல்லன்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரஜப் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அவரோட பந்தில் மட்டும் அவுட்டாக கூடாதுனு நெனச்சி விளையாடுனேன் : பிலிப் சால்ட்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 26 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தலா 18 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணியானது 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிலிப் சால்ட் 27 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 56 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவருக்கு அடுத்து மாயங்க் அகர்வால் 19 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைதானத்தில் பந்து சற்று நகர்ந்து வந்தாலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிடம் மட்டும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டே தான் விளையாடினேன். ஏனெனில் ஏற்கனவே அவர் இந்த தொடரில் என்னை இரண்டு முறை ஆட்டமிழக்க வைத்திருக்கிறார். எனவே இம்முறை அவருக்கு எதிராக சரியான திட்டத்துடன் வந்து விளையாடி இருந்தேன்.

இதையும் படிங்க : இந்த ஒரே திட்டத்தை வெச்சு பஞ்சாப்பை முடிச்சேன்.. ஜுன் 3இல் வெறித்தனமா கொண்டாடுவோம்.. சூயஸ் பேட்டி

இந்த வெற்றி எங்களுக்கு ஒரு நல்ல மொமெண்டத்தை கொடுத்துள்ளது. நிச்சயம் இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என பிலிப் சால்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -