நம்பர் ஒன் முக்கியமல்ல.. 3.5 மணி நேரத்தில் இந்தியாவை எங்க வலையில் வீழ்த்துவோம்.. வங்கதேச கோச் பேட்டி

Phil Simmons
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் முதல் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்து இந்தியா அசத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

அந்தப் போட்டியிலும் வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐசிசி டி20 தொடரில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்திய அணியில் கடந்த காலங்களில் வங்கதேசத்துக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மறுபுறம் லீக் சுற்றுடன் வெளியேற காத்திருந்த வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை கடைசி போட்டியில் இலங்கை தோற்கடித்ததால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

நம்பர் ஒன் முக்கியமல்ல:

அங்கே முதல் போட்டியிலேயே இலங்கையை தோற்கடித்து வங்கதேசம் அசத்தியது. அந்த வெற்றியால் வங்கதேச ரசிகர்கள் இலங்கை ரசிகர்களிடம் பாம்பு நடனமாடியது வைரலானது. இந்நிலையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை எந்த அணிகளாலும் தோற்கடிக்க முடியும் என்று வங்கதேசத்தின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார். அதற்காக தாங்களும் தேவையான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே போட்டி நாளில் இந்தியாவை தங்களுடைய திட்டத்தில் விழ வைத்து வெற்றி பெற முயற்சிப்போம் என்று சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை தோற்கடிக்கும் திறமை ஒவ்வொரு அணியிடமும் இருக்கிறது. ஏனெனில் போட்டி அன்றைய நாளில் நடைபெறும். அதனால் இந்தியா இதற்கு முன் என்ன செய்தது என்பது முக்கியமல்ல”

- Advertisement -

பயிற்சியாளர் நம்பிக்கை:

“அவை அனைத்தும் வரும் புதன்கிழமை 3.5 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. நாங்கள் முடிந்தளவு சிறப்பாக விளையாட முயற்சித்து இந்தியாவின் ஆயுதங்களை கலைக்க முயற்சிப்போம். அப்படித் தான் உங்களால் போட்டிகளை வெல்ல முடியும். இந்தியா நம்பர் ஒன் அணியாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு போட்டியின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது”

இதையும் படிங்க: வேற வழியில்ல.. சஞ்சு சாம்சன் அதை செய்வார்ன்னு இந்திய அணி நம்புது.. கோச் ரியான் ஆதரவு பேட்டி

“ஆனால் நாங்கள் போட்டிகளை நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறோம். இதே மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற பிட்ச் மிகவும் நன்றாக இருந்தது. எனவே டாஸ் என்பது வெற்றியை தீர்மானிக்க கூடியதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார். இதற்கிடையே கடந்த காலங்களில் சந்தித்த தோல்விக்கு பதிலடியாக இம்முறை இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியுடன் வங்கதேச ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement