இவரையா எந்த டீமும் செலக்ட் பண்ணல.. காட்டடி அடித்து டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – பில் சால்ட்

Phil-Salt
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணியானது இந்த டி20 தொடரில் அதற்குப் பழி தீர்க்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த டி20 தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்து இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.

- Advertisement -

இருப்பினும் தற்போது அடுத்தடுத்து நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த டி20 தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) கணக்கில் சமன் செய்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஃபில் சால்ட் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 268 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 192 ரன்களை மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியை சேர்ந்த துவக்க வீரரான பில் சால்ட் 57 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 7 பவுண்டரி என 119 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அவர் ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ 3வது ஒன்டே நடைபெறும் போலண்ட் பார்க் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அந்த வகையில் இங்கிலாந்து அணி சார்பாக ஒரு வீரர் சர்வதேச டி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசுவது இதுவே முதல் முறை. அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்த இங்கிலாந்து வீரராகவும் நேற்று சாதனையை நிகழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக இரண்டு டி20 சதங்களை விளாசிய அதிரடி ஆட்டக்காரரான பில் சால்ட் 1.50 கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலையில் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்றிருந்த வேளையில் அவரை எந்த ஒரு ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்காதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement