இந்தியா – தெ.ஆ 3வது ஒன்டே நடைபெறும் போலண்ட் பார்க் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Boland Park Paarl
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் அதே 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள இத்தொடரை 3வது போட்டியில் வென்று கைப்பற்ற இரு அணிகளும் போராட உள்ளன.

அதில் 2வது போட்டியில் பவுலிங் நன்றாக இருந்த போதிலும் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் ராகுல் ஆகியோரை தவிர்த்து இதர வீரர்கள் பேட்டிங்கில் கை கொடுக்கத் தவறியது இந்தியாவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் இந்தியா அசத்துவது அவசியமாகிறது.

- Advertisement -

போலாண்ட் பார்க்:
அந்த வகையில் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் இப்போட்டி டிசம்பர் 21ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பார்ல் நகரில் இருக்கும் போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மலைப்பகுதிகளின் ஓரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்த அழகான மைதானத்தில் 1997 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை நடைபெற்றுள்ள 15 போட்டிகளில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்கா 8 வெற்றிகளையும் 1 தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுபுறம் இங்கு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 1997இல் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி டையில் முடிந்தது.

- Advertisement -

இம்மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (204) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (146) பதிவு செய்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். இங்கு அதிக விக்கெட்டுகளை (7) எடுத்த இந்திய பவுலராக அனில் கும்ப்ளேவும் சிறந்த பவுலிங்கை பதிவு செய்தவராக ஜவஹல் ஸ்ரீநாத்தும் சாதனை படைத்துள்ளனர். இம்மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 351/3, கென்யாவுக்கு எதிராக, 2001

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 21ஆம் தேதி பார்ல் நகரில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
போலண்ட் பார்க் மைதானம் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் 250க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளன. இருப்பினும் 2வது இன்னிங்ஸில் பிட்ச் ஸ்லோவாக மாறி பேட்டிங்க்கு சவாலை ஏற்படுத்துவதால் பவுலர்கள் ஆதிக்கத்தின் காரணமாக சேசிங் செய்வது கடினமாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகள் கொட்டி வாங்கியது ஏன்? கொல்கத்தா ஆலோசகர் கம்பீர் விளக்கம்

அதனாலேயே இங்கு வரலாற்றில் நடைபெற்ற 15 போட்டிகளில் 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 6 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே இம்முறையும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement