ஆர்.சி.பி அணிக்கு விழப்போகும் பெரிய அடி.. பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக வெளியேறும் பில் சால்ட் – காரணம் என்ன?

Phil Salt
- Advertisement -

நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 12 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி, லக்னோ அணிக்கு எதிரான போட்டி என இரண்டு லீக் போட்டிகள் அந்த அணிக்கு எஞ்சியுள்ளன.

ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறும் பிலிப் சால்ட் :

இதன் காரணமாக இந்த இரண்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அணியின் இந்த சிறப்பான செயல்பாடு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடும் அந்த அணியின் நட்சத்திர துவக்க வீரரான பிலிப் சால்ட் பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேற இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்படி பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக பிலிப் சால்ட் வெளியேறினால் அது ஆர்சிபி அணிக்கு பெரிய இழப்பாகவும் மாறும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பிலிப் சால்ட் 168 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 239 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

கடந்த இரண்டு போட்டிகளாக காய்ச்சல் காரணமாக விளையாடாமல் இருந்த அவர் எஞ்சியுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாட இருக்கிறார். அதன் பின்னர் பெங்களூரு அணியில் இருந்து வெளியேற இருக்கிறார். அதற்கு காரணம் யாதெனில் : அவருக்கு இம்மாத இறுதியில் குழந்தை பிறக்க இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் தனது மனைவியுடன் இருக்கவேண்டும் என்று கருதியே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயராக விளையாடும் ரஜத் பட்டிதார்.. புதிய கேப்டனான ஜிதேஷ் சர்மா – ஆர்.சி.பி அணியில் என்ன நடந்தது?

ஏற்கனவே ஆர்.சி.பி அணியின் மற்றொரு இளம் வீரரான ஜேக்கப் பெத்தல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் வெளியேற இருக்கும் நிலையில் பிலிப் சால்ட்டும் வெளியேற இருப்பது அந்த அணிக்கு பெரிய இழப்புதான்.

Advertisement