இம்பேக்ட் பிளேயராக விளையாடும் ரஜத் பட்டிதார்.. புதிய கேப்டனான ஜிதேஷ் சர்மா – ஆர்.சி.பி அணியில் என்ன நடந்தது?

Patidar and Jitesh
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியானது லக்னோ நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆர்.சி.பி அணிக்கு கேப்டனான ஜிதேஷ் சர்மா :

அதனை தொடர்ந்து தற்போது சன்ரைசர்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வழக்கமாக ஆர்சிபி அணியின் கேப்டனாக விளையாடும் ரஜத் பட்டிதார் இன்றைய போட்டியில் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இப்படி ரஜத் பட்டிதார் திடீரென ஆர்சிபி அணிக்கு கேப்டன்சி செய்யாதது ஏன்? புதிய கேப்டனாக ஜிதேஷ் சர்மா ஏன் நியமிக்கப்பட்டார்? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் அனைவரது மத்தியிலும் இருக்கின்றன.

அது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் ஆர்.சி.பி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதாருக்கு கடைசியாக நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது கடந்த பல நாட்களாகவே ஓய்வில் இருந்து வந்த அவர் அந்த காயத்திலிருந்து முழுவதுமாக இன்னும் மீளவில்லை.

- Advertisement -

அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டிதார் இம்பேக்ட் வீரராக மட்டும் இந்த போட்டியில் விளையாடுகிறார். எதிர்வரும் பிளே ஆப் சுற்று போட்டிகளில் அவரது பங்களிப்பு முக்கியம் என்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரோஹித்தோட பதவி மட்டுமல்ல..விராட் கோலியின் இடத்தையும் அவர் தான் பாத்துக்கனும் – சுப்மன் கில்லுக்கு வந்த வாய்ப்பு

இப்படி ரஜத் பட்டிதார் காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயராக விளையாடும் வேளையில் அவருக்கு அடுத்து அணி வீரர்களுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஜிதேஷ் சர்மாவிற்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஒரு போட்டியில் கேப்டன்சி செய்துள்ள அவருக்கு ஆர்.சி.பி அணியின் கேப்டன் வாய்ப்பு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement