கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய பிரபலம் – விவரம் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில்(35 வயது) தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சிடில் அறிவித்துள்ளார்.

siddle

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 221 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும், 2 டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் பிக்பாஷ் போன்ற தொடர்களில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் அறிமுகமான சிடில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டாக சச்சின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட பதிவில் : வாழ்த்துக்கள் பீட்டர் சிடில் கிரிக்கெட் சாம்பியன் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். மொத்தம் 221 விக்கெட்டுகளுடன் தன் பயணத்தை முடித்து உள்ளார் என்று குறிப்பிட்டு நீங்காத நினைவுகள் நன்றி என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement