விராட் கோலி எப்பேர்ப்பட்ட கேப்டன். அவரைப் போய் இவருடன் ஒப்பிடுவதா? – பாக் கேப்டனை விமர்சித்த டேனிஷ் கனேரியா

virat kohli Danish Kaneria
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் வைட் வாஷ் தோல்வியை பதிவு செய்து பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையிலான இங்கிலாந்திடம் 3 போட்டிகளிலும் சரமாரியான அடி வாங்கிய பாகிஸ்தான் கடந்த நவம்பர் மாதமும் சொந்த மண்ணில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதே அணியிடம் 4 – 3 (7) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் நெதர்லாந்து கொடுத்த அதிர்ஷ்டத்தால் ஃபைனலுக்கு சென்று விட்டு 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் மட்டும் பேசிய பாகிஸ்தான் மீண்டும் இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்டது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய டெஸ்ட் தொடரிலும் 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தற்போது இங்கிலாந்துக்கு எதிராவும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளது.

கம்பேர் பண்ணாதீங்க:
அதற்கிடையே துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் தங்களை விட தரவரிசையில் கீழே உள்ள இலங்கையிடம் ஃபைனலில் தோற்ற பாகிஸ்தான் படுதோல்வி சந்தித்தது. மொத்தத்தில் இந்த வருடம் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரை தவிர்த்து ஏறக்குறைய அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. அந்த அத்தனை தோல்விகளும் பாபர் அசாம் தலைமையில் வந்துள்ளதால் அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

Babar-Azam-and-Virat-Kohli

மேலும் 2019க்குப்பின் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி கேப்டனாக பொறுப்பேற்ற அவர் சமீப காலங்களில் சுமாராக கேப்டன்ஷிப் செய்வதுடன் பேட்டிங்கிலும் ஃபார்மை இழந்து திண்டாடுகிறார். அப்படிப்பட்ட அவரை 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்துள்ள விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என்று முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பாபர் அசாம் ஜீரோ கேப்டன் என்று தெரிவிக்கும் அவர் சொந்த மண்ணில் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் யூடியூப் பக்கத்தில் வேதனையுடன் பேசியது பின்வருமாறு. “அனைவரும் முதலில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் மிகப்பெரிய வீரர்கள். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு யாருமே இல்லை. வேண்டுமானால் நீங்கள் தொடர்ந்து புகழ்ந்து பேசினால் பாகிஸ்தான் வீரர்கள் கிங்காக இருக்கலாம்”

Danish Kaneria Babar Azam

“ஆனால் அவர்களிடம் வெற்றியை பெற்றுத் தருமாறு நீங்கள் கேட்டால் அவர்கள் ஜீரோவைத் தான் பெற்றுக் கொடுப்பார்கள். குறிப்பாக பாபர் அசாம் கேப்டனாக மிகப்பெரிய ஜீரோ ஆவார். அவரிடம் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்தும் திறமையில்லை. இந்த தொடரில் கேப்டன்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோரை பார்த்து கற்றுக் கொள்ள அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அல்லது தன்னுடைய ஈகோவை தூக்கி எறிந்து விட்டு சப்ராஸ் அஹமதை பார்த்து எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: வீடியோ : என்ன ஆனாலும் அதை செய்ய மாட்டேன், எப்போவுமே நான் குரு தோனிக்கு கீழ தான் – இஷான் கிசான் பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

“அதே போல் இந்த தொடரில் முகமது ரிஸ்வான் என்ன செய்தார்? சிறந்த டி20 வீரரான அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது. அவருக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ள சர்ப்ராஸ் அஹமத் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார். இப்படி அடுத்தடுத்த தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதால் விரைவில் பாகிஸ்தான் வாரியத்திலும் அணியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement