வீடியோ : என்ன ஆனாலும் அதை செய்ய மாட்டேன், எப்போவுமே நான் குரு தோனிக்கு கீழ தான் – இஷான் கிசான் பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

Ishan Kishan Fans
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரை இழந்த இந்தியா கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட ஆறுதல் வெற்றி பெறுவதற்கு இரட்டை சதமடித்த இஷான் கிசான் முக்கிய பங்காற்றி அனைவரது பாராட்டுகளை பெற்றார். குறிப்பாக 126 பந்துகளில் 200 ரன்களை கடந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் மற்றும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனைகளை தகர்த்து இரட்டை உலக சாதனைகளை படைத்தார். அத்துடன் அடுத்ததாக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையிலும் ஜார்க்கண்ட் அணிக்காக சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

முன்னதாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அசத்திய அவரை இந்த வருடம் 15 கோடி என்ற பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் தக்க வைத்தது. அதனால் அனைவரும் கவனமும் தன் பக்கம் திரும்பியதால் எப்படியாவது சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்தை சந்தித்த அவர் பார்மை இழந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் ஐபிஎல் தொடருக்குப் பின் இந்தியாவுக்காக விளையாடத் துவங்கிய அவர் மீண்டும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

தோனிக்கு கீழே:
இந்நிலையில் ரஞ்சி கோப்பையில் தனது மாநிலமான ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் அவரை ராஞ்சியில் ரந்திர் குமார் எனும் ரசிகர் நேரடியாக சந்தித்து ஆட்டோகிராப் வாங்க முயற்சித்தார். குறிப்பாக தன்னுடைய மொபைல் போன் பின்பக்கத்தில் ஆட்டோகிராப் போடுமாறு ரசிகர் கேட்டுக்கொண்டார். அதை வாங்கி ஆட்டோகிராப் போடச் சென்ற இசான் கிசான் ஏற்கனவே அந்த இடத்தில் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் ஆட்டோகிராப் இருந்ததால் அந்த இடத்தில் தமது ஆட்டோகிராப் போட முடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.

இருப்பினும் அதற்கு மேலே இருந்த காலியான இடத்தில் போடுமாறு ரசிகர் தொடர்ந்து அன்புடன் கேட்டதற்கு தமது குருவான தோனியின் ஆட்டோகிராப் இருக்கும் இடத்திற்கு மேலே தாம் எப்படி தம்முடைய ஆட்டோகிராப் போட முடியும்? என்று மீண்டும் இஷான் கிசான் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து ரசிகர் கேட்டுக் கொண்டதால் தோனியின் கையெழுத்துக்கு கீழே ஆட்டோகிராப் போட்ட இசான் கிஷான் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மஹி பாயின் கையெழுத்து மேலே உள்ளதால் நான் இதை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். இந்த போனை விட்டுவிட்டு வேறு எங்காவது நான் ஆட்டோகிராப் போட்டுத் தருகிறேன். அதுவும் உங்களிடம் தானே இருக்கும். ஆனால் தோனி பாய் ஆட்டோகிராப் போட்டுள்ள இடத்திற்கு மேலே நிச்சயம் போட மாட்டேன். இது அவருடைய கையெழுத்தாகும். நான் எப்படி அதற்கு மேல் கையெழுத்து போட முடியும்? ஏனெனில் நாங்கள் அவருடைய உயரத்தை எட்டவில்லை. வேண்டுமானால் அவரது கையெழுத்துக்கு கீழே நான் போட்டுத் தரவா? அப்படியானால் போட்டுத் தருகிறேன்” என்று பேசினார்.

தங்களது மாநிலமான ஜார்க்கண்ட் சேர்ந்த அந்த இருவருமே சிறந்த கிரிக்கெட் வீரர்களாக திகழ்வதால் அவர்கள் இருவரது ஆட்டோகிராபையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு முயற்சித்ததாக இறுதியில் அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அத்துடன் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தோனி ஆகியோரில் உங்களது ரோல் மாடல் யார் என்று மற்றொறு செய்தியாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு சந்தேகமின்றி தோனி தான் என்று பதிலளித்த இஷான் கிசான் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ரஞ்சி போட்டியிலும் இப்படி ஒரு வெறித்தனமான ஆட்டமா? டெஸ்ட் சேன்ஸ்ஸ பிடிக்காம விடமாட்டாரு போலயே

“உறுதியாக தோனி தான். அவரை நான் அனைத்து நேரங்களிலும் பார்ப்பேன். களத்திலும் களத்திற்கு வெளியேவும் அவரது அமைதி உட்பட அனைத்தும் எனக்கு பிடிக்கும். இந்தியாவுக்காக உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் ஆற்றிய பங்கில் 70% செய்தால் கூட நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று குருவை மதித்து பேசினார்.

Advertisement