ஓரிரு போட்டிகளில் விளையாடிய தகுதி இல்லாதவர்கள் எல்லாம் பேசுறாங்க – விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு பாக் வீரர் பதிலடி

Kohli-2
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஓய்வெடுத்து வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்கவில்லை என்பதால் கடுமையான விமர்சனங்களை தினந்தோறும் எதிர்கொண்டு வருகிறார். இதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்சிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாட துவங்கிய அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Kohli

- Advertisement -

மேலும் ஆனால் ஐபிஎல் 2022 ஒரே சீசனில் 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசியாக பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களைக் கூட தாண்டாதது என எதிர்பார்த்ததை விட மோசமாக செயல்பட்டு வருவதால் பொறுமையிழந்த அனைவரும் எப்போது சதமடிப்பார் என்று பேச்சுகளை விட்டுவிட்டு அணியில் இருந்து நீக்குமாறு கேட்க தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக பெரிய பெயரை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக ரன்கள் அடிக்காமல் எத்தனை நாட்கள் விளையாடுவீர்கள் என்று கேள்வி எழுப்பிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் டெஸ்ட் அணியில் அஷ்வின் நீக்கப்பட்டால் டி20 அணியின் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமுல்லை என்ற உச்சபட்ச விமர்சனத்தை முன்வைத்தார்.

ஏராளமான ஆதரவு:
அத்துடன் இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து வெளிவர சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புங்கள் என்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்களின் ஆலோசனையை பின்பற்றாத அவர் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்தார். ஆனால் கூறியதுபோல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் மட்டும் பங்கேற்று விட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுப்பதால் அதற்காக தனியாக ஒரு விமர்சனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். இருப்பினும் 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியுடன் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மென் என்று நிரூபித்துள்ள அவருக்கு கெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவை கொடுக்கின்றனர்.

kohli century

மேலும் மோசமான தருணத்தில் ஆதரவை கொடுத்தால்தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பரம எதிரியான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இன்னும் திறமை உள்ளதால் டி20 உலக கோப்பையில் விளையாட தகுதியானவர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உட்பட விமர்சனங்களையும் மிஞ்சி ஏராளமானவர்களின் ஆதரவை விராட் கோலி பெற்று வருகிறார். அந்த வரிசையில் இணைந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் 1 – 2 போட்டிகளில் விளையாடிய நிறைய முன்னாள் வீரர்கள் விராட் கோலி மீது விமர்சனம் எப்புவது சிரிப்பை உண்டாக்குவதாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல பாகிஸ்தான் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி முற்றிலும் மாறுபட்ட வீரர். இதுபோன்ற மோசமான தருணங்களை அனைத்து வீரர்களும் தங்களது வாழ்வில் சந்திப்பார்கள். அதில் சிலர் உடனடியாக மீண்டு விடுவார்கள் சிலர் மீள்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அவர் பார்முக்கு திரும்ப ஒரு பெரிய இன்னிங்ஸ் போதுமானது. கிரிக்கெட்டின் மீது இருக்கும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் அவரை மற்ற வீரர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டுகிறது”

Kamran

“சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள அவர் வெளியில் வைக்கப்படும் இந்த விமர்சனங்களை முதலில் கேட்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலும் 1 – 2 போட்டிகளில் விளையாடியவர்கள் எல்லாம் அவரைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர். அது போன்றவர்கள் விமர்சிப்பதை பார்ப்பது எனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது” என்று கூறினார். அதாவது ஒருசில போட்டிகளில் விளையாடிவிட்டு முன்னாள் வீரர்கள் என்ற பெயரில் விமர்சனங்கள் செய்பவர்களின் கருத்துகளை முதலில் விராட் கோலி காதிலேயே வாங்க மாட்டார் என்று தெரிவிக்கும் கம்ரான் அக்மல் 70 சதங்களை அடித்துள்ளதால் அதற்கு அவர் கவனம் கொடுக்கவும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நேர்மறையாக இருந்து இதற்கு முந்தைய காலங்களில் என்ன செய்தோம் என்பதை யோசித்து அதை திரும்ப செய்தாலே பார்முக்கு திரும்பி விடலாம் என்றும் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “உங்களின் கால்கள், தலை, பேட்டை சுழற்றும் வேகம், தோள்பட்டை என அனைத்தும் ஒருசேர இருக்க வேண்டும். ஒரு வீரர் இதை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நேர்மறையாக இருந்தால் போதும். இதற்கு முந்தைய காலங்களில் என்ன செய்தோம் என்பதை யோசித்து அதில் கவனம் செலுத்துங்கள். ஒரு வீரருக்கு அவரை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement