ஒன்னும் பண்ண முடியாது, பேசாம இந்தியா சொல்வதை கேளுங்க – பாகிஸ்தான் வாரியத்துக்கு முன்னாள் பாக் வீரர் அறிவுரை

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒரு காலத்தில் களத்தில் நேருக்கு நேர் ஆக்ரோசமாக மோதிக் கொண்ட காலங்கள் மாறி தற்போது எல்லை பிரச்சினை காரணமாக களத்திற்கு வெளியே மோதிக் கொள்கின்றன. குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையின் 16வது தொடர் வரும் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் எல்லைப் பிரச்சனை காரணமாக அதில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று முன்தினம் அறிவித்தது புயலை கிளப்பியுள்ளது. ஏனெனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது எதிர்பாரா ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக பாகிஸ்தான் வாரியம் பதிலளித்துள்ளது.

Jay-sha

- Advertisement -

அதனால் அதே 2023இல் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை உட்பட 2031 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடரிலும் தங்களது அணியும் பங்கேற்காது என பாகிஸ்தான் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன் திட்டமிட்டபடி தங்களது நாட்டில் ஆசிய கோப்பையை நடத்துவதற்கு ஆதரவை திரட்டும் வகையில் இதர ஆசிய நாடுகள் பங்கேற்கும் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்காமல் புறக்கணித்து இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பதிலடி கொடுக்க வேண்டுமென அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் கொந்தளிக்கின்றனர்.

ஒன்னும் பண்ண முடியாது:
இருப்பினும் ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் பங்கு போடும் நிலையில் இந்தியா மட்டும் அதற்கு நிதி வழங்கும் நாடாக இருக்கிறது. மேலும் ஆசிய கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா இருப்பதால் அடுத்த ஆசிய கோப்பையை பொது இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்ததை கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளதை யாராலும் தடுக்க முடியாது. அவை அனைத்தையும் விட சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட அதிக வருமானத்தை ஈட்டும் பணக்கார வாரியமாக இருப்பதால் பிசிசிஐ எடுக்கும் முடிவை பாகிஸ்தானால் தடுக்க முடியாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

எடுத்துக்காட்டாக 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் 84, 94 போட்டிகளாக ஐபிஎல் தொடரை விரிவுபடுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டின் அட்டவணையில் பிசிசிஐ செய்யும் மாற்றத்தை ஐசிசியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் உலகின் இதர நாடுகளை காட்டிலும் ஐசிசிக்கு பிசிசிஐயிடம் இருந்து தான் அதிகப்படியான வருமானம் கிடைக்கிறது. அதுபோக 2023 உலகக்கோப்பையில் பங்கேற்காமல் இந்தியாவை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்குப் பணம் அந்நாட்டு வாரியத்திற்கு கிடைக்காது. அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் என்ன செய்தாலும் இந்தியாவை எதிர்க்க முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அவர்கள் சொல்வது போல அடுத்த ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு உண்டான வேலையை பார்க்குமாறு நிதர்சனத்தை பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பிசிசிஐக்கு எதிராக பிசிபி (பாகிஸ்தான் வாரியம்) எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் பிசிசிஐ உலகிலேயே மிகவும் பணக்கார வாரியம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற இதர வாரியங்கள் பிசிசிஐக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து வைத்துள்ளதால் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகின்றன. ஏனெனில் இந்திய வாரியம் மிகவும் சக்தி வாய்ந்தது. மறுபுறம் பாகிஸ்தான் வாரியம் பலவீனமானது”

Kaneria

“அதனால் பிசிசிஐ சொல்வதை பாகிஸ்தான் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக பாகிஸ்தான் வாரியம் தங்களை தாழ்ந்தவர்களாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் ஏற்கனவே இரு நாட்டுக்குமிடையே அரசியல் உறவுகள் சரியாக இல்லை. எனவே மேற்கொண்டு பிரச்சனைகளை வளர்க்காமல் அடுத்த ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய வாரிய தலைவர்கள் சேர்ந்து மீட்டிங் நடத்த வேண்டும். அதை ஐசிசி உறுப்பினர்களுக்கு மத்தியில் துபாயில் நடத்தலாம். அங்கு இரு வாரியங்களும் தூதர்களை கொண்ட அந்த முக்கிய குழுக்களை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement