ஐபிஎல் தொடரை மாதிரி நாங்களும் இந்த விடயத்தை செய்வோம் – சவாலுடன் பாகிஸ்தான் அறிவிப்பு

T2 World Cup vs IPL ICC vs BCCI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இம்முறை 10 அணிகள் பங்கேற்றதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்களாக ரசிகர்களை பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் மகிழ்வித்தது. வழக்கத்தை விட இம்முறை கோப்பையை வெல்வதற்கு இருமடங்கு போட்டி காணப்பட்ட நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் ஹைடன்ஸ்ஸ் அறிமுக வருடத்திலேயே கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக 1000க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை பேட்ஸ்மென்கள் பறக்க விட்டதால் அடுத்த ஐபிஎல் எப்போது துவங்கும் என்று இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படி நிமிடத்திற்கு நிமிடம் அனல் பறந்த ஐபிஎல் போட்டிகளை பார்த்துவிட்டு சர்வதேச அளவில் இந்தியா – இலங்கை போன்ற ஒருபுறம் பலவீனமான அணிகள் மோதும் டி20 போட்டிகள் தரமற்றதாக ரசிகர்களுக்கு அலுப்புத் தட்டும் வகையில் அமைகிறது. எனவே அதை கால்பந்தை போல டி20 உலகக்கோப்பையாக மட்டும் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்திவிட்டு எஞ்சிய நேரங்களில் 2 ஐபிஎல் அல்லது பெரிய ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

விரிவாகும்:
அதை சமீபத்தில் 48,930 கோடிகளை பிசிசிஐ-க்கு அள்ளிக் கொடுத்த ஐபிஎல் 2023 – 2027 கால கட்டத்திற்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு ஏலம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆம் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கிய டிஸ்னி ஸ்டார், வியாகாம்18, டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 3 நிறுவனங்களிடம் அந்த காலகட்டத்தில் 410 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ உறுதியளித்துள்ளது. அதாவது 2023, 2024 சீசன்களில் வழக்கம்போல 74 போட்டிகளுடன் நடைபெறும் ஐபிஎல் 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக கொஞ்சம் கொஞ்சமாக பிரம்மாண்டமாக விரிவடைய உள்ளது.

T2 World Cup vs IPL ICC vs BCCI

அதில் வெளிநாட்டு வீரர்கள் தடையின்றி பங்கேற்பதற்காக சர்வதேசப் போட்டிகளுக்கான ஐசிசி 2024 – 2031 கால அட்டவணையில் இரண்டரை மாதங்கள் ஐபிஎல் நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஒரு போட்டியின் மதிப்பு 107.5 கோடியாக உயர்ந்துள்ள ஐபிஎல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் நடத்தும் ஈபிஎல், எம்பிஎல் போன்ற கால்பந்து, கூடைப்பந்து தொடர்களையும் முந்தி உலகிலேயே அதிக வருமானத்தைக் கொட்டும் 2-வது விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் எதிர்ப்பு:
அதனால் சர்வதேச போட்டிகளால் கிடைக்கும் வருமானத்தை விட ஐபிஎல் தொடரால் இரு மடங்கு வருமானம் கிடைக்கும் என்பதால் ஐசிசியும் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் ஐபிஎல் விரிவாக்கம் சர்வதேச போட்டிகளுக்கு ஆபத்து என்று கருதும் பாகிஸ்தான் அதை எதிர்த்து தடுப்பதற்காக இதர நாட்டு வாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஐசிசியிடம் போராட உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றிய சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.

Ramiz Raja Sourav Ganguly

“ஐபிஎல் தொடருக்காக உலக அட்டவணையில் மாற்றங்கள் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பு அல்லது முடிவு இதுவரை வரவில்லை. இது பற்றி ஐசிசி மாநாட்டில் என்னுடைய கருத்துக்களை நான் தெரிவிக்க உள்ளேன். என்னுடைய கருத்து தெளிவானது: உலக கிரிக்கெட்டில் ஏதேனும் வளர்ச்சி இருந்தால் நாங்கள் குறுகிய மாற்றத்திற்கு உள்ளாகிறோம் என்று அர்த்தம். எனவே அதை நாங்கள் வலிமையான முறையில் சவால் செய்ய உள்ளோம் மற்றும் ஐசிசியிடம் எங்களது கருத்தை வலுவாக வெளிப்படுத்துவோம்” என்று கூறினார்.

- Advertisement -

எல்லா வகையிலும்:
மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு 5, 10 கோடிகள் என பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் தொடரில் வெறும் 1, 2 கோடிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் நிறைய வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர். இதை தடுப்பதற்காக 2022 – 23 கால கட்டத்திற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் பட்ஜெட்டில் 15 பில்லியன் அளவுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரமீஷ் ராஜா அறிவித்துள்ளார்.

Ramiz-raja

அதாவது வரும் காலங்களில் பிஎஸ்எல் தொடரில் விளையாடப் போகும் வீரர்களின் சம்பளம் ஐபிஎல் தொடருக்கு நிகராக உயர்த்தப்பட உள்ளதாக கூறியுள்ள அவர் இது வெளிநாட்டு டி20 தொடர்களை விட பிஎஸ்எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அவ்ளோதான், உங்களுக்கு டி20 உ.கோ வாய்ப்பு கடினம் – சிஎஸ்கே வீரரை மீண்டும் வம்பிழுக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர்

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த முதலீடுகள் சிறப்பாக செயல்படும் நட்சத்திர வீரர்களை ஊக்குவிப்பதாக இருப்பதுடன் மற்ற நாடுகளின் வீரர்களுடன் ஒப்பிடும்போது சம்பளத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதாகவும் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement