அதெப்படி நீங்க இந்தியாவுக்கு போகலாம்.. இளம் தெ.ஆ வீரருக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ்.. காரணம் என்ன?

Corbin Bosch
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் விளையாடும் அந்தத் தொடரில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் களமிறங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போக வெளிநாடுகளைச் சேர்ந்த நிறையத் தரமான வீரர்களும் விளையாட உள்ளனர்.

அந்த வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் கோர்பின் போஸ் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவர் நல்ல ஆல் ரவுண்டராக அறியப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் முதலில் பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் அணிக்காக டைமண்ட் பிரிவில் டிராஃப்ட் முறையில் வாங்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

இந்தியாவுக்கு எப்படி போகலாம்:

அதற்கு முன்பாக ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்ற அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறினார். அதனால் அவருக்கு பதிலாக கோர்பின் போஸை தற்போது மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் முறையில் வாங்கியுள்ளது.

அதன் காரணமாக பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகுவதாக கோர்பின் போஸ் அறிவித்துள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடர் மார்ச் 22இல் துவங்கி மே 25ஆம் தேதி முடிகிறது. மறுபுறம் பிஎஸ்எல் தொடர் ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கி மே 18ஆம் தேதி நிறைவுறுகிறது. எனவே அந்த 2 தொடர்களிலும் விளையாட முடியாது என்பதால் பிஎஸ்எல் தொடரிலிருந்து போஸ் விலகியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் நோட்டீஸ்:

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் பிஎஸ்எல் தொடரை விட ஐபிஎல் தொடரில் நிறைய சம்பளம் கொடுக்கப்படுவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் பிஎஸ்எல் தொடரில் ஒப்பந்தம் செய்து விட்டு எப்படி நீங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்கு செல்லலாம் என்று அவருக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது பற்றிய நியாயமான விளக்கத்தைக் கொடுக்குமாறு பாகிஸ்தான் வாரியம் அவருக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸை அனுப்பி வைத்துள்ளது”

இதையும் படிங்க: இன்னும் 2.5 வருடம் இருக்கு.. 2027 உலகக் கோப்பையில் விளையாட ரோஹித், கோலிக்கு இது வேணும்.. ஹர்பஜன் பேட்டி

அதற்கு விரைவில் பதிலளிக்குமாறு பாகிஸ்தான் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான பதில் நியாயமாக இல்லாத பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வாரியம் எச்சரித்துள்ளது. அது வரை இது பற்றி மேற்கொண்டு பாகிஸ்தான் வாரியம் எந்த கருத்துக்களும் தெரிவிக்காது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement