இன்னும் 2.5 வருடம் இருக்கு.. 2027 உலகக் கோப்பையில் விளையாட ரோஹித், கோலிக்கு இது வேணும்.. ஹர்பஜன் பேட்டி

Harbhajan Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையில் வென்று சாதனைப் படைத்தது. அந்த வெற்றியுடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 36 வயதாகும் அவர்கள் சமீப காலங்களாகவே தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிப்பதில் தடுமாறுகிறார்கள்.

அதனாலேயே 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து அவர்கள் ஒன்றாக ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியுடன் அவர்கள் விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்று கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.

- Advertisement -

2027 உலகக் கோப்பை:

மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட முயற்சிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அதற்குள் இளம் வீரர்களால் நிலமைகள் மாறி ரோகித் சர்மா, விராட் கோலிக்கு இடம் கிடைக்காமல் போகலாம் என்று அவர் கூறியுள்ளார். எனவே அந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு 39 வயதில் ரோகித் சர்மா நல்ல ஃபிட்னஸ் கடைபிடிப்பதுடன் வெற்றிக்கான பசியுடன் இருப்பது அவசியம் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஃபிட்னெஸ் முக்கியம்:

“ரோகித் சர்மா இன்னும் சாதிக்க ஏதாவது இருக்குமேயானால் அது 50 ஓவர் உலகக் கோப்பை என்று நான் கருதுகிறேன். அதை ரோகித் சர்மா வெல்ல விரும்புவார். ஆனால் அதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கிறது. அது பெரிய தொலைவு. அதுவரை நம்முடைய ஃபிட்னஸ் எங்கே இருக்கிறது? நம்முடைய வெற்றிக்கான பசி எங்கே இருக்கிறது? என்பதை ரோகித் சர்மா பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: யுவ்ராஜ் சிங்கிடம் நேருக்கு நேராக சண்டையிட்ட வெ.இ வீரர்.. தடுத்த லாரா, அம்பயர்கள்.. நடந்தது என்ன?

“ஒருவேளை அப்போதும் அந்த இரண்டையும் கொண்டிருந்தால் ரோஹித் சர்மா தாராளமாக விளையாடலாம். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். விராட் கோலிக்கும் இதே நிலைமை தான் பொருந்தும்” என்று கூறினார். முன்னதாக 2027இல் விராட் கோலி 38, ரோஹித் சர்மா 39 வயதை தொட்டிருப்பார்கள். அதனால் அந்த வயதிலும் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை கடைபிடித்து விளையாட முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement