விராட் கோலியின் நீண்டநாள் டி20 சாதனையை முடியடித்த பாபர் அசாம் – பாகிஸ்தான் வாரியம் கொடுத்த ரிப்ளை

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் தொடர்ச்சியாக நீடித்து வருகிறார். இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் நெடுநாள் சாதனை ஒன்றிணையும் அவர் முறியடித்துள்ளார். அதன்படி ஐசிசி வெளியிட்டு வரும் டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அதிக நாட்களில் நம்பர் ஒன் பேட்ஸ்மனாக இருந்த விராட் கோலியை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி 1013 நாட்கள் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த சாதனையை தகர்த்து 1013 நாட்களையும் கடந்து பாபர் அசாம் இந்த தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் விராட் கோலியின் சாதனையை ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறார்.

- Advertisement -

அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல சாதனைகளையும் பாபர் அசாம் தகர்த்தெறிவார் என்று பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் பாராட்டி வரும் வேளையில் அவரது ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. அதே வேலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமான சரிவினை சந்தித்துள்ளது.

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் விளையாடி வருவதும் அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த மிகப்பெரிய சாதனையை முறியடித்த பாபர் அசாமுக்கு அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகமும் ட்விட்டரின் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி ஐசிசி பாபர் அசாமை வாழ்த்தி வெளியிட்டிருந்த ஒரு ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் : பாபர் அசாமால் பாகிஸ்தானே பெருமை படுகிறது என்று அவர்களுக்கு ரிப்ளை செய்துள்ளனர். அதோடு பாபர் அசாம் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக டி20 கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் இருந்துள்ளது மிகப்பெரிய சாதனை

இதையும் படிங்க : சிகிச்சைக்காக ஜெர்மனி போயுள்ள கே.எல் ராகுல் கூட யாரை கூட்டிட்டு போயிருக்காரு தெரியுமா? – அவரே வெளியிட்ட புகைப்படம்

அதோடு ஷாகின் அப்ரிடி தனது கரியரின் உச்சபட்சமாக தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் பவுலிங் தரவிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்த இந்த ரிப்ளை தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement