சிகிச்சைக்காக ஜெர்மனி போயுள்ள கே.எல் ராகுல் கூட யாரை கூட்டிட்டு போயிருக்காரு தெரியுமா? – அவரே வெளியிட்ட புகைப்படம்

KL-Rahul
- Advertisement -

இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல் ராகுல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்காக பயிற்சியையும் மேற்கொண்ட ராகுல் அந்த தொடர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட அந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து ஜெர்மனி சென்று சிகிச்சை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு அடுத்து வந்த அயர்லாந்து தொடரையும் அவர் தவறவிட்டார்.

அதோடு ஜெர்மனி சென்று சிகிச்சை மேற்கொள்ளும் ராகுல் அதிலிருந்து மீள்வதற்கு நேரம் பிடிக்கும் என்பதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள், டி20 என அனைத்து தொடரிலும் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது ஜெர்மனி சென்றுள்ள ராகுல் தனக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்தது என்றும் இன்னும் சில வாரங்களில் தான் இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த தகவலின்படி :

- Advertisement -

நான் கடந்த இரண்டு வாரங்களாக கடினமான சூழ்நிலையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளேன். எனக்கு நடைபெற்ற ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தற்போது நான் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். நீங்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்ததற்கும், உங்களுடைய அனைத்து பிரார்த்தனைக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். ராகுல் இப்படி ட்விட்டரில் தனது பதிவினை வெளியிட்ட சில நிமிடங்களில் ராகுலின் காதலியாக கூறப்படும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்ட அதே புகைப்படத்தை வெளியிட்டு ராகுல் உடன் தான் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

Athiya Rahul

எனவே சிகிச்சைக்கு சென்றுள்ள கே.எல் ராகுல் ஜெர்மனியில் அதியா ஷெட்டியுடன் தான் சென்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கும் இடையே காதல் இருப்பதாகவும் எங்கு சென்றாலும் அவர்கள் ஒன்றாகவே பயணிப்பதும் பல புகைப்படங்களின் மூலம் உறுதியானது.

- Advertisement -

இந்நிலையில் ஜெர்மனி சென்றுள்ள ராகுலுடன் தற்போது அதியா ஷெட்டியும் சென்றுள்ளது இந்த புகைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. இந்திய அணியின் முதன்மை துவக்க வீரரான ராகுல் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அடிக்கடி ஏற்படும் காயம் காரணமாக இந்திய அணியில் உள்ளே வருவதும் போவதுமாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : இன்னைக்கு மட்டும் அந்த ரிசல்ட் வந்தா. பும்ரா தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் – பி.சி.சி.ஐ தகவல்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரின் முதன்மை துவக்க வீரராக பார்க்கப்படும் வரும் வேளையில் அடிக்கடி இவருக்கு ஏற்படும் காயம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement