சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செய்துள்ள சிறப்பு ஏற்பாடு.. ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது – விவரம் இதோ

PAK
- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டு விரைவில் அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டிற்கு பல்வேறு அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது பங்களாதேஷ் அணி அங்கு செல்ல இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் நேரில் பார்ப்பதற்கு குறைந்த விலைக்கான டிக்கெட்டை பாகிஸ்தான் வாரியம் நிர்ணயத்த வேளையில் தற்போது இந்த டெஸ்ட் தொடரை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் நிர்வாகம் ஒருவேளை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கான தொகை ரசிகர்களுக்கு முழுவதுமாக திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதற்கு காரணம் யாதெனில் : அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெற இருக்கிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள மைதானங்களின் கேலரியை அவர்கள் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளதால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் ரசிகர்களின் பாதுகாப்பு தான் முதன்மை என்பதனாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி-யின் 50 ஓவர் உலககோப்பை நடைபெற்ற வேளையில் அதற்கு பின்னர் தற்போது 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஐசிசி தொடரானது நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : 2வது சிறந்த தொடர்.. ஆஸிக்கு சமமாக சண்டையிடுவதில் அந்த அணியை இந்தியா மிஞ்சிட்டாங்க .. பாண்டிங் பாராட்டு

எனவே அந்த தொடரை ரசிகர்களை கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதனாலே மைதானம் புதுப்பிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement