- Advertisement -
ஐ.பி.எல்

அப்பாடா ஒரு வழியா 12 வருஷம் கழிச்சி ஜெயிச்சாச்சு.. ஷ்ரேயாஸ் ஐயரால் சாதித்த பஞ்சாப் அணி – விவரம் இதோ

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்களது சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்த லக்னோ அணி ஆறாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

12 ஆண்டுகால வரலாற்று வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை குவித்தது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. தற்போதைய நிலையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி ஏழு வெற்றிகளை பெற்றுள்ள வேளையில் இன்னும் எஞ்சியுள்ள மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்றால் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை எட்டிவிடும்.

இதன் காரணமாக அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே சறுக்கலை சந்தித்து வந்த பஞ்சாப் அணி ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று லகனோ அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் அவர்களது 12 ஆண்டு கால சோகமான ஒரு பாதை முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

அதாவது கடந்த 12 ஆண்டுகளாக தரம்சாலா நகரில் விளையாடிய பஞ்சாப் அணி ஒரு முறை கூட அந்த மைதானத்தில் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் நேற்று பெற்ற வெற்றியின் மூலம் அந்த 12 ஆண்டுகால சோகத்தை ஷ்ரேயாஸ் ஐயரின் ஆர்மி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கொடுத்த கேப்டனான அவரை மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் நிர்வாகம் கழட்டி விட்டது.

இதையும் படிங்க : இப்படி விளையாடுனா கஷ்டப்பட்டு தான் ஆகனும்.. எல்லா மேட்ச்லயும் சக்ஸஸ் ஆகும்னு நெனைக்குறது தப்பு – ரிஷப் பண்ட் பேட்டி

அப்படி மெகா ஏலத்திற்கு வந்த அவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகம் பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததோடு மட்டுமின்றி அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கியது. அந்த அணியின் நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாத வகையில் இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -