அவங்க குடுத்த சூப்பர் ஸ்டார்ட் தான் வெற்றிக்கு காரணம்.. சி.எஸ்.கே வை வீழ்த்திய பின்னர் – ஷ்ரேயாஸ் ஐயர் ஹேப்பி

Shreyas Iyer
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது சிஎஸ்கே அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவுசெய்து தற்போது 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அவர்களது பிளே ஆப் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

சி.எஸ்.கே அணிக்கெதிரான வெற்றிக்கு இதுவே காரணம் : ஷ்ரேயாஸ் ஐயர்

அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த சென்னை அணியானது இந்த தொடரில் எட்டாவது தோல்வியை பெற்று பிளே ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : சேசிங் என்றாலே எப்பொழுதும் எனக்கு பிடித்தமான ஒன்று.

அதிலும் குறிப்பாக இதுபோன்ற பெரிய இலக்கை எதிர்த்து சேசிங் செய்யும் போது மொமன்ட்டம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையிலேயே எங்களது அணியின் பேட்ஸ்மேன் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நான் ஹோம் மேட்ச், அவே மேட்ச் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை பின்பற்றிய பேட்டிங் செய்கிறேன்.

- Advertisement -

என்னால் முடிந்த வரை எனது அணிக்கு பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து எனது பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறேன். தற்போது நான் நல்ல பார்மில் உள்ளதால் எப்படிப்பட்ட இலக்கையும் எட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் எங்களது அணியின் துவக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் கொடுத்த துவக்கம் சேசிங்கை மிகச் சிறப்பாக அணுக உதவியது.

இதையும் படிங்க : மஹி பாய் அடித்து நொறுக்கிருப்பாரு.. சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்த திட்டம் இது தான்.. சஹால் பேட்டி

அவர்கள் இருவருமே மிகச் சிறப்பான ஃபார்மை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் பின்னால் வரும் எங்களாலும் போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க முடிகிறது. எங்களுடைய அணி தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இனியும் எங்களது இந்த வெற்றி தொடரும் என ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement