ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு மத்தியில் பஞ்சாப் கிங்ஸ் தங்களது முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. இம்முறை அந்த அணிக்கு 2 உலகக் கோப்பைகளை வென்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
அவருடன் 2024 ஐபிஎல், சயீத் முஷ்டாக் அலி கோப்பைகளை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை கேப்டனாக வழி நடத்த உள்ளார். எனவே இந்த வருடம் வரலாற்றை மாற்றி பஞ்சாப் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் அணியை ஐபிஎல் வரலாற்றின் மகத்தான அணியை மாற்றுவோம் என்று ரிக்கி பாண்டிங் சபதம் கூறியுள்ளார்.
சிறப்பான அணி:
இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே அதிகபட்சமாக தலா 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றின் மகத்தான அணிகளாக சாதனை படைத்துள்ளன. அதே போன்ற சாதனையை படைப்பதற்கான வேலைகளைத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணியின் ஒட்டுமொத்த தொலைநோக்கு பார்வையாகும்”
“எங்கள் அணியுடன் தரம்சாலா நகரில் இணைந்த முதல் நாளிலேயே நாம் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் விளையாடிய கிரேட்டஸ்ட் தனியாக உருவாக்கப் போகிறோம் என்று சொன்னேன். அந்தப் பயணத்திலேயே நாங்கள் இருக்கிறோம். அது ஒரே நாள் இரவில் நடைபெறாது. நீங்கள் அதை உருவாக்க வேண்டும். வெற்றி பெறுவதே உண்மையான அணுகுமுறை”
பாண்டிங் நம்பிக்கை:
“எதிரணியினர் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம். அதே சமயம் எங்களிடம் இருந்து எதையும் எதிரணிகள் பறிப்பதை விரும்பவில்லை” என்று கூறினார். மேலும் இந்த வருடம் முஷீர் கான், ப்ரியன்ஸ் ஆர்யா போன்ற திறமையான இளம் வீரர்கள் பஞ்சாப் அணிக்கு கிடைத்துள்ளதாகவும் பாண்டிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தல தோனி – சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்
எனவே இப்போதிலிருந்து பஞ்சாப் அணியின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் வருங்காலங்களில் பஞ்சாப் அணி வெற்றிகரமாக செயல்பட முடியும் என்றும் பாண்டிங் கூறியுள்ளார். அவருடைய வார்த்தைகள் எந்தளவுக்கு சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



