- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி – தரமான ரெக்கார்டு

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய மாபெரும் சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது பல்வேறு சாதனைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நிகழ்த்தி அசத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஜாம்பவான் அணியான சி.எஸ்.கே அணியும் பின்னுக்கு தள்ளி ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் வான்கடே மைதானத்தில் அதிகமுறை மும்பை அணியை வீழ்த்திய ஐபிஎல் அணியாக பஞ்சாப் அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. வான்கடே மைதானத்தில் மட்டும் இதுவரை மும்பை அணியை எதிர்த்து 11 முறை விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 முறை அவர்களை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் மும்பை அணியை அதிகமுறை வீழ்த்திய அணிகளாக சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் தலா ஐந்து வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தன.

- Advertisement -

இதையும் படிங்க : போறபோக்க பாத்தா பஞ்சாப் டீமுக்கு தான் கப் போல.. 2 வருஷமா சம்பவம் பண்ணும் ஷ்ரேயாஸ் கேங் – விவரம் இதோ

அதேபோன்று மும்பை அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை வெற்றி பெற்ற அணியாக சிஎஸ்கே அணி 18 முறை அவர்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்று மும்பை அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை அணியை 18 முறை வீழ்த்தி அதிகமுறை அந்த அணியை வீழ்த்திய அணிகளில் சிஎஸ்கே அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்களை சேசிங் செய்த அணியாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணியே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -