2.5 ஓவரில் 50 ரன்ஸ் தெறித்தும்.. ராஜஸ்தான் 12 வருட மோசமான சாதனை தோல்வி.. அடக்கிய பஞ்சாப் வெற்றி

RR vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் மதியம் 3.30 மணிக்கு 59வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 219/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா 9, பிரப்சிம்ரன் 21, மிட்சேல் ஓவன் 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய பஞ்சாப்புக்கு மிடில் ஆர்டரில் மிரட்டிய நேஹல் வதேரா 70, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். கடைசியில் சசாங் சிங் 59* (30), ஓமர்சாய் 21* (9) ரன்கள் விளாசி மிரட்டலான ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

சாதனை துவக்கம்:

ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்சி ஆகியோர் அடித்து நொறுக்கி பட்டாசாக விளையாடினர். அதனால் 2.5 ஓவரில் 50 ரன்கள் அடித்த ராஜஸ்தான் நடப்பு ஐபிஎல் தொடரில் வேகமாக அரை சதமடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் ஹைதராபாத், டெல்லிக்கு எதிராக 3 ஓவரில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

தொடர்ந்து மிரட்டலாக விளையாடிய அந்த ஜோடியில் சூரியவன்சி 4 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 40 (15) ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெய்ஸ்வால் 50 (25) ரன்கள் குவித்த போது விக்கெட்டை இழந்தார். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 20, ரியான் பராக் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:

இருப்பினும் அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்புறம் தடுமாறிய ஹெட்மயர் 11 (12) ரன்னில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தார். இறுதியில் துருவ் ஜுரேல் 53 (31) ரன்களை அடித்தும் ஃபினிஷிங் செய்ய தவறியதால் 20 ஓவரில் 209/7 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் நடப்பு சீசனில் தங்களுடைய 8வது தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: ஸ்லோவா ஸ்டார்ட் பண்ணாலும் இப்போ அவங்க வேறலெவல்.. மும்பை இந்தியன்ஸை புகழ்ந்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக (8) தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2012, 2013 சீசன்களில் புனே வாரியர்ஸ் இந்தியா அணியும் தலா 8 தோல்விகளை சந்தித்துள்ளது. மறுபுறம் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றியைப் பறித்த பஞ்சாப்புக்கு ஓமர்சாய் 2, மார்கோ யான்சென் 2, ஹர்ப்ரீத் ப்ரார் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement