33 ரன்னில் தவறவிட்ட டெல்லியை சொல்லி அடித்த சாம் கரண்.. கிண்டல்களுக்கு பதிலடி.. பஞ்சாப் அசத்தியது எப்படி?

Sam Curran 63
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு பெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முல்லான்பூர் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 29, மிட்சேல் மார்ஷ் 20 ரன்களில் அவுட்டானார்கள்.

அதைத்தொடர்ந்து வந்து நிதானமாக விளையாடிய சாய் ஹோப் 33 ரன்களில் ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார். அதே போல எதிர்ப்புறம் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய ரிசப் பண்ட் ரசிகர்களின் மிகப்பெரிய ஆரவார பாராட்டுக்கு மத்தியில் களமிறங்கினார். இருப்பினும் 2 பவுண்டரியுடன் 18 (13) ரன்களில் அவுட்டாகி சென்ற அவரைத் தொடர்ந்து வந்த ரிக்கி புய் 3, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பஞ்சாப் வெற்றி:
போதாக்குறைக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த அக்சர் பட்டேலும் 21 (13) ரன்களில் அவுட்டானார். அதனால் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட டெல்லிக்கு கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் 25 ரன்கள் அடித்த அபிஷேக் போரேல் மொத்தம் 32* (10) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்

அதனால் தப்பிய டெல்லி 20 ஓவரில் 174/9 ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து வெற்றிக்கு 175 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 22 (16) ரன்களில் போல்ட்டாக்கிய இஷாந்த் சர்மா ஜானி பேர்ஸ்டோவை 9 (3) ரன்களில் ரன் அவுட்டாக்கி துரதிஷ்டவசமாக காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

அப்போது வந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாட முயற்சித்து 26 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த ஷாம் கரன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த ஜித்தேஷ் சர்மா 9 (9) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார். அதனால் 100/4 என தடுமாறிய பஞ்சாப் அணிக்கு மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷாம் கரன் அரை சதமடித்து வெற்றி பாதிக்கு அழைத்து வந்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த லியன் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார். ஆனால் அப்போது 19வது ஓவரின் 3வது பந்தில் ஷாம் கரணை 63 (47) ரன்களில் அவுட்டாக்கிய கலீல் அகமது அடுத்ததாக வந்த சஷாந்த் சிங்கை டக் அவுட்டாக்கினார். ஆனாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38* (21) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரிலேயே 177/6 ரன்கள் எடுத்த பஞ்சாப் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றே தொடரை வெற்றியுடன் துவங்கியது.

இதையும் படிங்க: 4, 6, 4, 4, 6.. ஹர்ஷல் படேலை பொளந்த இம்பேக்ட் பிளேயர்.. 453 நாட்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்

குறிப்பாக 32 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை டேவிட் வார்னர் தவற விட்டதை பயன்படுத்திய ஷாம் கரன் 63 ரன்கள் குவித்து டெல்லியை தோற்கடித்தார். பெரிய தொகைக்கு வாங்கப்பட்டும் கடந்த வருடம் சொதப்பியதால் கிண்டல்களுக்குள்ளான அவர் இம்முறை முதல் போட்டியிலேயே அசத்தி பதிலடி கொடுத்துள்ளார். அதனால் டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது குல்தீப் யாதவ், தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement