ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த பால் ஸ்டெர்லிங் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அயர்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ராஸ் அடையர் 39 ரன்களையும், டக்கர் 38 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியானது :
அயர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக அயர்லாந்து அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது அயர்லாந்து அணியின் கேப்டனாக விளையாடிய பால் ஸ்டெர்லிங் முன்னாள் இந்திய வீரரான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 159 ஆட்டங்களில் விளையாடி அதிக டி20 போட்டியில் விளையாடிய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : எனக்கு புடிச்ச விடயமே சுமையா மாறிடுச்சு.. அதனால் தான் ரிட்டயர்டு ஆயிட்டேன் – மனம் திறந்த யுவ்ராஜ் சிங்
இந்நிலையில் அவரது இந்த சாதனையை கடந்த பால் ஸ்டெர்லிங் நேற்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 160-வது ஆட்டத்தில் விளையாடி தற்போதைய நிலையில் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



