இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவ்ராஜ் சிங் கடந்த 2000-ஆவது ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2017-ஆம் ஆண்டு வரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். அதோடு 2008-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 132 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து மனம் திறந்த : யுவ்ராஜ் சிங்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் முதன்மை நட்சத்திர வீரராக விளையாடி வந்த அவருக்கு 2019-ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை என இரண்டு தொடர்களிலுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். அதோடு இந்திய அணியின் பல்வேறு முக்கிய வெற்றிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து ஏழு ஆண்டுகள் கடந்த பிறகு ஏன் அந்த அறிவிப்பை வெளியிட்டேன்? என்பது குறித்த சில தகவல்களை மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசி பகுதியில் எனக்கு அணியில் உரிய மரியாதையும், ஆதரவும் சுத்தமாக கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : சேட்டா வரார் வழிய விடு.. வழிய விடு.. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சஞ்சு சாம்சனை கலாய்த்த கேப்டன்
அதனால் என்னால் எனது விளையாட்டை ரசிக்கவும் முடியவில்லை. இப்படி எனக்கு மரியாதையும், ஆதரவும் கிடைக்காத இடத்தில் ஏன் விளையாட வேண்டும்? என்று தோன்றியது. அதன் காரணமாகவே நான் ஓய்வை அறிவித்தேன். எனது வாழ்க்கையில் எனக்கு பிடித்தது கிரிக்கெட் மட்டும் தான். நான் மிகவும் பிடித்த ஒன்றாக பார்த்த விடயமே எனக்கு சுமையாகவும் மாறியது. அதன் காரணமாகவே ஓய்வை அறிவித்தேன் என யுவ்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



