ஜெயசூர்யாவின் 24 வருட சாதனையை தூளாக்கிய நிஷாங்கா.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சரித்திர சாதனை

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதி பல்லகேல் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாடோ ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 27 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 182 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கைக்கு வலுவான துவக்கத்தை கொடுத்தது. அப்போது அரை சதமடித்த பெர்னான்டோ 88 (88) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் குஷால் மெண்டிஸ் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

சரித்திர சாதனை:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய நிசாங்கா சதமடித்து சவாலை கொடுத்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா தன்னுடைய பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கையை 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவி 44 (36) ரன்கள் ஆட்டமிழந்தார்.

ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய நிசாங்கா 150 ரன்கள் தாண்டி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி இரட்டை சதமடித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் 20 பவுண்டரி 8 சிக்சருடன் 210* (139) ரன்கள் குவித்த அவர் அபாரமான ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் இலங்கை 381/3 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

அதை விட இபோட்டியில் 210 ரன்கள் குவித்த நிசாங்கா ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற மாபெரும் சரித்திர சாதனை படைத்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இலங்கை வீரர் என்ற ஜாம்பவான் சனாத் ஜெயசூர்யாவின் 24 வருட ஆல் டைம் சாதனைடை உடைத்த அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஜாம்பவான் ஜெயசூர்யா 189 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 213 ரன்ஸ்.. விராட் கோலி, ராஸ் டெய்லர் சாதனை சமன் செய்த வார்னர்.. போராடிய வெ.இ அணியை வீழ்த்திய ஆஸி

அந்த வகையில் தன்னுடைய சாதனையை உடைத்த நிசாங்காவுக்கு மைதானத்தில் இருந்த ஜெயசூர்யா கைதட்டி மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார். மறுபுறம் சுமாராக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரீத் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தது. இதை தொடர்ந்து 382 என்ற மெகா இலக்கை ஆப்கானிஸ்தான் துரத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement