213 ரன்ஸ்.. விராட் கோலி, ராஸ் டெய்லர் சாதனை சமன் செய்த வார்னர்.. போராடிய வெ.இ அணியை வீழ்த்திய ஆஸி

David Warner
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஸ் செய்த ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை வென்றது.

இதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. அத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி ஹோபார்ட் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் அது நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு நூறாவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது.

- Advertisement -

வார்னரின் சாதனை:
அத்துடன் ஏற்கனவே அவர் 112 டெஸ்ட் மற்றும் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கடந்த மாதம் ஓய்வு பெற்றதை மறக்க முடியாது. இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார். மேலும் உலக அளவில் விராட் கோலி மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோருடைய சாதனையையும் அவர் சமன் செய்தார்.

அந்த வகையில் தன்னுடைய சாதனை போட்டியில் அதிரடியாக விளையாடிய வார்னர் விரைவாக ரன்களை சேர்த்தார். அவருடன் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜோஸ் இங்லீஷ் 39 (25) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் 16 (13) ரன்களில் அவுட்டானார். அதே ஓவரில் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதமடித்த டேவிட் வார்னர் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 70 (36) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் டிம் டேவிட் 37* (12), மேத்தியூ வேட் 21 (14) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்ததால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 213/7 ரன்கள் குவித்து அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 214 ரன்களை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீஸ்க்கு 8.3 ஓவரில் 89 ரன்கள் அடித்து அட்டகாசமான துவக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் ஜான்சன் சார்லஸ் 42 (25) ரன்கள் விளாசி அவுட்டானார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அரை சதமடித்து அசத்திய மற்றொரு துவக்க வீரர் ப்ரண்டன் கிங் 53 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த நல்ல துவக்கத்தை வீணடிக்கும் வகையில் மிடில் ஆர்டரில் நிக்கோலஸ் பூரான் 18 (17), கேப்டன் ரோவ்மன் போவல் 14 (5), ஷாய் ஹோப் 16 (8), ஆண்ட்ரே ரசல் 1, ரூதர்போர்ட் 7, ரோமரியா செபார்ட் 2 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: அடிச்சி சொல்றேன்.. இந்தமுறை டி20 உலககோப்பையை ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – டேரன் சமி பேட்டி

அதனால் கடைசி நேரத்தில் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக 34* (15) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 202/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement