அடிச்சி சொல்றேன்.. இந்தமுறை டி20 உலககோப்பையை ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – டேரன் சமி பேட்டி

Sammy
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் பத்திற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க இருக்கும் வேளையில் இந்த தொடரின் இறுதியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது எந்த அணி? என்பது குறித்த பேச்சுக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகின்றன.

தென்னாப்பிரிக்கா மண்ணில் முதன்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி அதற்கு அடுத்து இதுவரை டி20 உலக கோப்பை கைப்பற்றாமல் இருந்து வருகிறது. இதுவரை 8 டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற்று முடிந்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறையும், இங்கிலாந்து அணி இரண்டு முறையும் இந்த கோப்பையை கைப்பற்றி உள்ளன.

- Advertisement -

அதோடு பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வெல்லும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டேரன் சமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் நாங்கள் முன்னேறிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு முதல் நாங்கள் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறோம். அது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் இம்முறை உலகக் கோப்பை டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருப்பதினால் இந்த கோப்பையை வெல்லும் முதல் அணியாக நாங்கள் இருப்போம் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : மேலும் ஒரு இந்திய வீரர் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்பு – மிகப்பெரிய பின்னடைவு

எங்களது அணியில் உள்ள வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அளவில் விளையாடவில்லை என்றாலும் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களது அணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இம்முறை டி20 உலககோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம் என டேரன் சமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement