ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனான பேட் கம்மின்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகள், 69 ஒருநாள் போட்டிகள் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனை தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 41 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்த நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தத்தின்படி கொல்கத்தா அணியில் விளையாடி வரும் கம்மின்ஸ் ஆரம்ப போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து இருந்தார். ஆனால் அதன்பிறகு தனது மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்போது கடந்த சில போட்டிகளாகவே கொல்கத்தா அணியின் பிளேயிங் இணைக்கப்படாமல் வெளியில் அமர வைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இப்படி வெளியில் அமர்ந்திருக்கும் பேட் கம்மின்ஸ் இந்தியாவில் தனது அனுபவம் குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கிடைக்கும் சிற்றுண்டி குறித்த தனது சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
— Pat Cummins (@patcummins30) May 5, 2022
Wow, I’ve been coming to India for 11 years how had I never tried it before!?! Delicious https://t.co/QlIDc0ik4r
— Pat Cummins (@patcummins30) May 5, 2022
அந்த வகையில் மும்பை மக்களின் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்த பாவ் பஜ்ஜியை சாப்பிட்ட அவர் அதனுடைய சுவை குறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பதிவிடுகையில் : 11 ஆண்டுகளாக இந்தியாவிற்கு வந்து செல்கிறேன். ஆனால் பாவ் பஜ்ஜியை எப்படி இதற்கு முன்னர் சாப்பிடாமல் விட்டேன் என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் பாவ் பஜ்ஜி ஒரு மிகச் சுவையான உணவு மிகவும் அருமையாக இருந்தது என்று அதனுடைய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : அடுத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக ரெய்னா கையில் எடுத்த புதிய திட்டம் – சி.எஸ்.கே பாக்குமா?
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தும், மிக அதிக விலையில் ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தும் கொல்கத்தா அணியில் அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்காதது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.