ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது.
ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் : பேட் கம்மின்ஸ் பேச்சு
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவிக்க அடுத்ததாக 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்ததால் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை பதிவு செய்தோம். எங்களது அணியின் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். அதேபோன்று பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக எங்களது அணியின் பவுலர்கள் செயல்பட்டிருந்தார்கள்.
அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாக செய்ததாக உணர்கிறேன். இந்த ஆடுகளம் மிகச் சிறப்பான போட்டியை தந்துள்ளது. இன்னும் சில விடயங்கள் மாறி இருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருப்போம். ஆனாலும் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணியின் பந்துவீச்சார்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : எங்களோட முதல் எண்ணம் இதுதான்.. ஹைதராபாத் அணிக்கெதிரான தோல்விக்கு பின் – ரஜத் பட்டிதார் பேச்சு
அதிலும் குறிப்பாக இஷான் மலிங்கா சீசன் முழுவதுமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பவர்பிளே ஓவர்களில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று ஷாகிப் ஹுசைன் அற்புதமாக பந்து வீசுகிறார். அடுத்து வரும் பிளே ஆப் சுற்று போட்டியிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



