அவரு டீம்க்குள்ள வந்ததும் எங்க ஆட்டம் எப்படி இருக்குதுனு பாத்தீங்களா? – வெற்றிக்கு பின்னர் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-ஆவது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 20-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களை குவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் சார்பாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 121 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் எடுத்ததன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. பெங்களூரு மைதானத்தில் விளையாடி பெறும் இந்த வெற்றி மிகவும் கடினமான ஒன்று.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் எங்களது துவக்க வீரர்களான மிட்சல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் துவங்கிய விதம் எங்களை மிகச் சிறப்பாக விளையாட வைத்தது. இது போன்ற துவக்கம் ஒரு சில போட்டிகள் தான் கிடைக்கும். மேலும் ஸ்டாய்னிஸ் எங்கள் அணிக்குள் வந்ததும் எங்களுடைய பலம் அதிகரித்ததாக உணர்கிறேன். ஏனெனில் அவர் விளையாடி வரும் விதம் எங்களுக்கு எவ்வாறு திருப்பு முனையை கொடுத்தது என்று எங்களது முடிவுகளில் தெரிகிறது.

இதையும் படிங்க : அவரோட கேட்ச் விட்டா என்ன நடக்கும்னு பாத்துட்டோம் – தோல்விக்கு பின்னர் பாபர் அசாம் பேட்டி

ஆடம் ஜாம்பா தனது சிறப்பான பந்துவீச்சை இந்த போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். மிடில் ஓவர்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை அவர் மீண்டும் செய்து காண்பித்துள்ளார். மூன்று, நான்கு நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவர் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்த இரண்டு போட்டிகளாக வெளிப்படுத்தி வருகிறார் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement