நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 113 ரன்கள் மட்டுமே குவித்ததால் கொல்கத்தா அணியிடம் எளிதில் வீழ்ந்து இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 113 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் காரணமாக கொல்கத்தா அணிக்கு 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் குவித்து 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் 52 ரன்களையும், பந்துவீச்சில் ரசல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே கொல்கத்தா அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். துரதிஷ்டவசமாக ஸ்டார்க் என்று மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நாங்கள் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை.
துவக்கத்திலேயே ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் பெரிய ஸ்கோரை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு அது கூடுதல் பலமாக அமைந்தது. 160 ரன்கள் வரை எடுத்திருந்தால் எங்களால் இந்த போட்டியில் போராடியிருக்க முடியும். இந்த மைதானம் 200 ரன்களுக்கான மைதானம் கிடையாது.
இதையும் படிங்க : அந்த 3 வேதனையை தாண்டி சாதிச்ச.. ஸ்ரேயாஸ் தான் இந்தியாவுக்கு சரியான அடுத்த கேப்டன்.. உத்தப்பா அதிரடி
எனவே இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்து இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். இருந்தாலும் இந்த தொடரில் நாங்கள் மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ளோம். அதேபோன்று பல அற்புதமான வெற்றிகளையும் பெற்றுள்ளோம். இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் இந்த தொடர் முழுவதுமே எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



