அந்த 3 வேதனையை தாண்டி சாதிச்ச.. ஸ்ரேயாஸ் தான் இந்தியாவுக்கு சரியான அடுத்த கேப்டன்.. உத்தப்பா அதிரடி

Robin Uthappa 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா 2வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு 10 வருடங்கள் கழித்து ஆலோசகராக வந்த கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஆனால் உண்மையாக களத்தில் இறங்கி அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி கேப்டனாக அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வெற்றியின் நாயகனாக திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை. 2020இல் வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லியை ஐபிஎல் ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற அவர் தற்போது கொல்கத்தா அணிக்காக முதல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
குறிப்பாக காயத்தால் அவதிப்பட்ட போது அவரை பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து நீக்கியதாக உத்தப்பா தெரிவித்துள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் சந்தித்த பின்னடைவை தாண்டி அவர் சாதித்துள்ளதாக உத்தப்பா பாராட்டியுள்ளார். எனவே சுப்மன் கில் போன்றவரை விட ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் இங்கே சொல்கிறேன். அவர் இந்தியாவின் வருங்கால கேப்டன். சுப்மன் கில்லுக்கு முன்பாக அவர் அடுத்த கேப்டன் வரிசையில் நிற்கிறார். அணியை நிர்வகிப்பதில் அவர் கேரக்டரை கொண்டுள்ளார். இந்த சீசனில் அவர் நிறைய கற்றிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் கௌதம் கம்பீர், சந்திரகாந்த் பண்டிட், அபிஷேக் நாயர் ஆகிய 3 வலுவான நபர்களுடன் வேலை செய்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”

- Advertisement -

“மொத்த ஐபிஎல் தொடரிலும் உங்களின் சிறந்த செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி சரியான முடிவுகளை எடுப்பது கடினமாகும். ஆனால் அவர் அதை அதிரடியாக செய்தார். இது அவருடைய குணாதிசயத்தை பற்றியும் திறமை மற்றும் நம்பிக்கையையும் கூறுகிறது. அதன் காரணமாக அடுத்த இந்திய கேப்டனுக்கான உரையாடலில் அவர் சரியான இடத்தில் தன்னை அமைத்துக் கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா மட்டுமே செய்த அரிதான சாதனையை நிகழ்த்திய ஸ்ரேயாஸ்.. 5வது வீரராகவும் ஸ்பெஷல் சாதனை

“குறிப்பாக காயத்தை சந்தித்தது, உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்டது, பிசிசிஐ மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இடம் கிடைக்காதது போன்ற அம்சங்களால் அவர் நிறைய பின்னடைவுகளை சந்தித்தார். இப்பினும் அவர் அதை அரிதாகவே பேசினார். அது தமக்காகவும் அணிக்காகவும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதில் தெளிவாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இது ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக வளர்வதற்கான துவக்கம் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement