
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 76 ரன்களையும், ஜாஸ் பெட்லர் 64 ரன்களையும் குவித்தனர். பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது :
20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்ததால் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அவர்கள் பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் அவர்கள் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். அதே வேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த சன் ரைசர்ஸ் அணி ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அந்தவகையில் பேட்டிங்கின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் போட்டியை சிறப்பாக துவங்கவில்லை. அதேபோன்று பந்துவீச்சிலும் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம். இவை இரண்டும் தான் தோல்விக்கான காரணங்களாக பார்க்கிறேன்.
இந்த போட்டியில் சில கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டோம். அதுவும் எங்களுக்கு பிரச்சனையாக மாறியது. 200 ரன்கள் வரை இலக்காக இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டி சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் கூடுதலாக வழங்கிய 20 முதல் 30 ரன்கள் தான் போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் பண்ண போயி 3 ஆண்டுகள் தடை பெற்ற ஸ்ரீசாந்த் – என்ன நடந்தது?
இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மாவும், நிதீஷ் ராணாவும் சிறப்பாக விளையாடினார்கள். மற்றபடி மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது ஏமாற்றம்தான் இருந்தாலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அணி இது என்பதனால் நிச்சயம் எங்களது அணியை வலுப்படுத்தி பலமாக மீண்டு வருவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.