ஐ.பி.எல் வரலாற்றில் தான் படைத்த சாதனை குறித்து பேசிய – ஆட்டநாயகன் பேட் கம்மின்ஸ் கூறியது என்ன?

Cummins
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களையும், பொல்லார்டு 22 ரன்களை எடுத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Suryakumar Yadhav MI vs KKR

தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியானது ஒரு கட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் துவக்க வீரர் வெங்கடேஷ் ஐயருடன் கை கோர்த்த பேட் கம்மின்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியை 16 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

16 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கம்மின்ஸ் தனது அதிரடியை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 6 சிக்ஸர் 4 பவுண்டரி என 56 ரன்கள் குவித்து அசத்தினார். துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இருந்தார்.

Pat Cummins Daniel Sams MI vs KKR

இந்நிலையில் இந்த போட்டியில் 14 பந்துகளை சந்தித்து இருந்தபோது 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் பேட் கம்மின்ஸ் அதிவேக அரை சதம் அடித்த கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார். ராகுல் 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

அந்த சாதனையை நேற்றைய போட்டியில் கம்மின்ஸ் சமன் செய்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து அவர் செய்த இந்த சாதனை குறித்து கூறுகையில் : இந்த சீசனில் நான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை விளையாடியதில் மகிழ்ச்சி. பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்தவுடன் நான் அதிகமாக யோசிக்க கூட நேரமில்லை. உண்மையிலேயே இந்த போட்டி எனக்கு திருப்தி அளித்துள்ளது.

இதையும் படிங்க : போயும் போயும் உங்களுக்கு இப்படியா ஆகனும்? மும்பையை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா?

நான் அடித்த பந்துகள் பறந்தன. எனது ஷாட்டுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இந்த புதிய சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை போலவே கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்திருப்பது எனது அதிர்ஷ்டம். இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement