நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்த ஐ.பி.எல் தொடரானது நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக ஐ.பி.எல் கேப்டனானது குறித்து பேசிய : பேட் கம்மின்ஸ்
இந்த தொடரில் பங்கேற்க இருந்த பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பல தகவல்களை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்த 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தவறவிடுகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
ஏனெனில் காயம் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடரை தவறவிட்ட பேட் கம்மின்ஸ் இன்னும் முழு உடற்தகுதியை எட்டாததால் இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவிறவிட இருக்கிறார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் என்பது மிகப்பெரிய ஒரு விடயம் என்றும் அப்படி தான் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டன்சி செய்தது குறித்த அனுபவத்தையும் பேட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் வந்துட்டார்.. இதுதான் தோனிக்கு சரியான நேரம் – ஆகாஷ் சோப்ரா கருத்து
நான் முதன் முதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது ஒரே மாதத்தில் எனது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் எண்ணிக்கை 2 மில்லியனில் இருந்து 3.5 மில்லியன் வரை உயர்ந்தது. ஐபிஎல் என்பது எவ்வளவு பெரிய தொடர் என்பதற்கு இதுவே ஒரு பெரிய சான்று. ஒட்டுமொத்த ஹைதராபாத் நகரமும் எங்களுக்கு பின்னால் நிற்கிறது என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



