சஞ்சு சாம்சன் வந்துட்டார்.. இதுதான் தோனிக்கு சரியான நேரம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash Chopra
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனானது வரும் மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த 2026 ஐபிஎல் தொடர் தான் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசன் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

தோனிக்கு இதுதான் சரியான நேரம் : ஆகாஷ் சோப்ரா

ஏனெனில் தற்போது 44 வயதை எட்டியுள்ள தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று அவரது இடத்தை சஞ்சு சாம்சனுக்கு விட்டுக் கொடுப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறும் போதும் தோனிக்கு இது தான் கடைசி சீசனா? என்ற கேள்வி அவரை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஆண்டும் தோனியின் ஓய்வு குறித்து பலரும் பேசத் தொடங்கியிருந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தோனியின் ஓய்வு குறித்த சில கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

இனிமேல் தோனி ஓய்வறையில் இருந்து அணியை வழிநடத்த முடியாது. கால்பந்தாட்டத்தை போன்று கிரிக்கெட் கிடையாது. தோனியின் மிகப்பெரிய பலமே போட்டியின் மீதான நுணுக்கமான பார்வையும், அவர் எடுக்கும் முடிவுகளும் தான். எனவே அவர் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவது சரியாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. அதுமட்டும் இன்றி தற்போது தோனியின் இடத்திற்கு சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : அங்கிள் கவலைப்படாதீங்க.. அவன் அசத்துவான்.. அபிஷேக் சர்மாவின் அப்பாவிடம் சொன்ன சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

இந்த சீசனிலேயே விக்கெட் கீப்பராக அவர் மிகச்சிறப்பாக செயல்படுவார் என்று கருதுகிறேன். தோனியின் உடற்தகுதி மற்றும் முழங்கால் வலி ஆகியவற்றை பொறுத்து அது அமையும் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் அவர் இம்பாக்ட் பிளேயராக தான் விளையாடுவார் என்றால் அவர் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement