
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கள் கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதற்கு இந்திய அணிக்கு இது முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஆஸ்திரேலியா அணிக்கும் இது மிக முக்கியமான தொடர் தான்.
ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றாததால் அவர்களுக்கும் இந்த தொடரானது மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. சொந்த மண்ணில் இம்முறை ஆஸ்திரேலிய அணி தங்களது பலத்தை இந்திய அணியிடம் காண்பிக்க தயாராகி வருகிறது.
கடந்த இருமுறையும் இந்திய அணியே ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் இரண்டு ஆல்ரவுண்டர்களை களம் இறக்கப்போவதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணியில் நாங்கள் இம்முறை இரண்டு ஆல்ரவுண்டர்களை பயன்படுத்தப்போகிறோம். உண்மையிலேயே இது நல்ல விஷயம் தான். கேமரூன் கிரீன், மிட்சல் மார்ஷ் ஆகிய இருவரும் மிக முக்கிய வாய்ந்த பணிகளை செய்ய இருக்கிறார்கள்.
கேமரூன் கிரீன் சர்வதேச அளவில் தற்போது நல்ல அனுபவத்தை பெற்று வருகிறார். மிட்சல் மார்ஷ் ஏற்கனவே மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் டாப் ஆறு இடத்தில் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வசதியை கொடுக்கும். நாதன் லயன் சுழற்பந்து வீச்சில் அதிக ஓவரை வீசுவார். ஆல்ரவுண்டர்களாக இவர்கள் இருவரும் இருப்பதால் ஐந்தாவது ஆறாவது பந்துவீச்சாளராக இவர்கள் இருவரையும் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க : வெற்றிகரமான இந்திய அணியில் அதுக்கு வாய்ப்பில்ல.. மோர்கல் இதை செஞ்சா மதிப்பை சேர்க்கலாம்.. அல்பி அட்வைஸ்
மேலும் இந்த இரண்டு வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்வார்கள் என்பதால் அது எங்கள் அணிக்கு கூடுதல் பலம். இந்திய அணிக்கு எதிராக அவர்கள் இருவரும் மிக முக்கிய பங்காற்றுவார்கள் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.