ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. அதன் காரணமாக மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி பலமான அணியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியே கோப்பையை வெல்லும் : பேட் கம்மின்ஸ்
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்காத கம்மின்ஸ் எதிர்வரும் இந்த உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் என்று தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி பற்றி அவர் கூறியதாவது : பாகிஸ்தான் உடனான டி20 தொடரை அண்மையில் எங்களது அணி இழந்திருந்தது.
ஆனாலும் அந்த தோல்வியை எங்களது வீரர்கள் எளிதாக மறந்து முன்னேறி செல்ல முடியும். ஏனென்றால் கடைசியாக 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக எங்களது அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 தொடரை இழந்தது. ஆனால் அதற்கு பிறகு விளையாடிய நாங்கள் அந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று அசத்தியிருந்தோம்.
அதனால் எங்களது வீரர்களுக்கு பார்மிற்கு திரும்பி வருவதற்கு கடந்த காலத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அந்த வகையிலேயே இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை இழந்தாலும் நாங்கள் இந்த டி20 உலக கோப்பை தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டும் இன்றி எங்களது அணியில் உலகத்திலேயே சக்தி வாய்ந்த துவக்க வீரர்களான மிட்சல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியா இல்ல.. இந்த டி20 உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு போட்டியே அந்த டீம் தான் – வருண் ஆரோன் பேட்டி
அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் எங்களது அணியே பெரும்பாலும் போட்டிகளை வெல்லும். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரிலும் டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல் போன்ற அதிரடியான வீரர்கள் இருப்பதினால் மிகப்பெரிய ரன் குவிப்புக்கு எங்களால் செல்ல முடியும். அதோடு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்தியா மற்றும் இலங்கை ஆடுகளங்களில் ஆடம் ஜாம்பா சிறப்பாக செயல்படுவார் என்பதால் எங்களால் இந்த கோப்பையை வெல்ல முடியும் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



